டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்க ஆட்சிக்கு வந்தால்.. ராமர் கோயிலை நிச்சயம் கட்டுவோம்..புது ரூட்டில் செல்லும் காங்கிரஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    நாங்க ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை கட்டுவோம்... இது காங்கிரஸ் அரசியல்- வீடியோ

    டெல்லி: மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஹரீஷ் ராவத் தெரிவித்துள்ள கருத்து புதிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    கடந்த 2014 லோக்சபா தேர்தலில் பிரச்சாரத்தின் போது பாஜக ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், பல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக ராமர் கோயில் கட்ட இயலவில்லை.

    Ram mandir will built when congress comes to power, says congress leader harish rawat

    மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான சட்ட சிக்கல்களை முன் வைத்து ராமர் கோயில் கட்டும் விவகாரத்தை கிடப்பில் போடுவதாக சிவசேனா, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றன. 2025ம் ஆண்டுக்குள் ராமல் கோயில் கட்டி முடிக்கப்படும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ஆர்எஸ்எஸ்சின் இந்த அறிவிப்பும், சிவசேனாவின் தொடர் விமர்சனங்களும் பாஜகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. நான்கரை ஆண்டு காலமாக ராமர் கோயில் பணிகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு தவிர்த்து வருவதாகவும் மற்ற இந்து அமைப்புகளும் கூறி வந்தன.

    ஆளும் பாஜகவுக்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தை காங்கிரஸ் தமக்கு சாதகமாக மாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளது. அதற்கு சிகரம் வைத்தார்போல.. அக்கட்சியில் உள்ள ஒவ்வொரு தலைவர்களும் ராமர் கோயில் விவகாரத்தை போகும் இடங்களில் எல்லாம் பேசி வருகின்றனர்.

    இந்நிலையில் காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் ஹாரிஷ் ராவத் பேசி இருக்கும் கருத்து அடுத்தகட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் அவர் அளித்துள்ள பேட்டியின் விவரம் வருமாறு:
    கண்ணியத்தை அவமதிப்பவர்கள் பாஜகவினர். அவர்கள் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டமாட்டார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் கண்டிப்பாக கட்டப்படும்.

    கர்நாடகாவில் பாஜகவானது குதிரை பேர அரசியலை முன்வைத்து செயல்படுகிறது. அதன் விளைவுகள் வரும் லோக்சபா தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி 27 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Ram temple will be built only when Congress comes to power says Congress senior leader Harish Rawat in delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X