டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி அரசாங்கம்... ராம்விலாஸ் பஸ்வான் மீண்டும் மத்திய அமைச்சரானார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Modi cabinet ministers list | பிரதமரானார் மோடி! அமைச்சர்களாகிய அமித்ஷா-ஜெய்சங்கர்

    டெல்லி: லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மீண்டும் மத்திய அமைச்சரானார்.

    மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

    கடந்த அமைச்சரவையில் இடம் பெற்ற ராஜ்நாத்சிங், நிதின்கட்காரி, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர், நிதின்தோமர் ஆகியோர் மீண்டும் மத்தியமைச்சர்களாக பதவியேற்றனர்.

    Ram Vilas Paswan Gets Cabinet Minister Again In Modi Government

    புதுமுகங்களுக்கு மோடி அமைச்சரவையில், இடம் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக-வில் 165 பேர் புதுமுக எம்.பி.க்களாக இருக்கிறார்கள். மேற்குவங்காளம், ஒடிசா மாநிலத்தில் இந்த முறை பாஜன அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    மக்களவைத் தேர்தலில் பீகாரில் போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் லோக் ஜனசக்தி கட்சி வெற்றி பெற்றது. ஜமுய் தொகுதியில் இருந்து இரண்டாம் முறையாக ராம் விலாஸ் பஸ்வானின் மகன், சிராங் பஸ்வான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    அதன்படி, மோடியின் புதிய அமைச்சரவையில் தனது மகன் ஒரு அமைச்சராக இருப்பார் என்று ராம் விலாஸ் பஸ்வான் கூறியிருந்தார். இந்தநிலையில், ராம்விலாஸ் பஸ்வான் மீண்டும் மத்திய அமைச்சராகி உள்ளார். அவர் போட்டியிடவில்லை என்றாலும், தேர்தல்களுக்கு முன்னதாக பா.ஜ.க. ஒரு ராஜ்ய சபை சீட் தருவதாக உறுதியளித்திருந்தது. அந்த வகையில், மீண்டும் மத்திய அமைச்சராகி உள்ளார். இதற்கு முன் அவர்,

    1. 1977 ல் முதன்முதலில் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றார்.

    2. 1980, 1984, 1989, 1996, 1998, 2000, 2004 மற்றும் 2014 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    3.1989 ஆம் ஆண்டில், பாஸ்வான் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

    4.1996 ல் அவர் ரயில்வே அமைச்சரானார்.

    5. லோக் ஜன்ஷக்தி கட்சி (LJP) ஐ 2000 ஆம் ஆண்டில் உருவாக்கினார்.

    6. யு.பி.ஐ. அரசாங்கத்தில், உரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

    7. 2014 ஆம் ஆண்டு மே மாதம் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்தில் நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சராக பாஸ்வான் நியமிக்கப்பட்டார். தற்போது மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

    English summary
    Ramvilas Paswan and Narendra Singh Tomar take oath as Union Ministers
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X