டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசியலை விடுங்கள்.. மாணவர்களின் நலனுக்காக செயல்படுங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் அட்வைஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: மாணவர்களின் கல்வியாண்டை நாம் காப்பாற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கேட்டுக் கொண்டுள்ளார்.

நீட் தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசும் நீட் தேர்வை நடத்தக் கூடாது என சில கல்வியாளர்களும், எதிர்க்கட்சியினரும் மாணவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Ramesh Pokriyal says we should have save academic year

இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இது போல் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் இதுகுறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறுகையில் நம் வாழ்க்கை அனைத்தையும் கடந்து போகத்தான் வேண்டும்.

மாணவர்களின் நலனை நீண்ட நாளுக்கு தொங்கலில் விட முடியாது. முழு கல்வியாண்டும் வீணாகக் கூடாது. நாடாளுமன்றம் இயங்குகிறது, அலுவலகங்கள் இயங்குகின்றன, அவ்வாறிருக்கையில் தேர்வுகள் மட்டும் ஏன் நடத்தக் கூடாது? மாணவர்களின் வாழ்வில் கல்வியே இல்லாத ஒரு ஆண்டு இருக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

மாணவர்களின் மனதை பாதிக்கும் நீட் வேண்டாம் : மோடிக்கு கடிதம் எழுதிய புதுச்சேரி முதல்வர்மாணவர்களின் மனதை பாதிக்கும் நீட் வேண்டாம் : மோடிக்கு கடிதம் எழுதிய புதுச்சேரி முதல்வர்

மாணவர்கள், பெற்றோர் கோரிக்கைகள், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நான் கேட்டுக் கொள்வது எல்லாம் ஒன்றுதான். மாணவர்களின் கல்வியாண்டை நாம் பாதுகாக்க வேண்டும். மாணவர்களின் நலன் கருதி நாம் நடந்து கொள்ள வேண்டும். அரசியலுக்கு அப்பால், நான் ஒன்றை சொல்கிறேன்.

Recommended Video

    NEET Exam: தமிழக மாணவர்களின் சதவீதம் சரிவு

    8.58 லட்சம் பேர் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 7.41 லட்சம் பேர் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. வெறும் 332 மாணவர்கள் மட்டுமே தேர்வு மையத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள். அது போல் நீட் அனுமதி சீட்டுகளை வெளியிட்ட முதல் 5 மணி நேரத்தில் விண்ணப்பித்த 15.97 லட்சம் பேரில் 6.84 லட்சம் பேர் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொண்டனர் என்றார்.

    English summary
    Minister Ramesh Pokriyal says we should have save academic year. We should have look into students interests.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X