டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழிக்காக வாதாடியவர் ராம்ஜேத்மலானி.. ஒரு பிளாஷ்பேக்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Ram Jethmalani மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவால் காலமானார்

    டெல்லி: நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழிக்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி வாதிட்டார்.

    மூத்த வழக்கறிஞரான ராம்ஜேத்மலானி தனது 95 ஆவது வயதில் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவர் முக்கியமான வழக்குகளில் முத்திரை பதித்தவர் என அனைவராலும் அழைக்கப்படுபவர்.

    2ஜி ஸ்பெர்ட்ரம் ஊழல் வழக்கிலும் இவர் வாதாடியுள்ளார். இந்த வழக்கில் கலைஞர் டிவிக்கு ரூ 214 கோடி கடன் வழங்கப்பட்ட விவகாரத்தில் கனிமொழியின் பெயரை குற்றப்பத்திரிகையில் சிபிஐ சேர்த்தது.

    அழைத்து வந்த வைகோ.. நீதிமன்றத்தை அசர வைத்த வாதம்.. 7 தமிழர்களின் உயிரை காத்த ராம் ஜெத்மலானி!அழைத்து வந்த வைகோ.. நீதிமன்றத்தை அசர வைத்த வாதம்.. 7 தமிழர்களின் உயிரை காத்த ராம் ஜெத்மலானி!

    ராம்ஜேத்மலானி

    ராம்ஜேத்மலானி

    இந்த நிலையில் கனிமொழி கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகினார். அப்போது அவருக்கு முன்ஜாமீன் வழங்குமாறு அவரது வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி வாதம் செய்தார்.

    வாதம்

    வாதம்

    மேலும் எல்லாத் தவறுக்கும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த ஆ ராசாதான் காரணம். கனிமொழிக்கு இதில் தொடர்பில்லை. அவர் ஒரு பெண், குழந்தைக்கு தாய், அவர் எங்கும் ஓடிவிட மாட்டார். எனவே அவருக்கு முன்ஜாமீன் தருமாறு வாதம் செய்தார்.

    விடுவிப்பு

    விடுவிப்பு

    எனினும் அவருக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டு 15 நாட்கள் கைது செய்யப்பட்டு கனிமொழி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் கனிமொழி, ஆ ராசா உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதற்கு ராம்ஜேத்மலானியின் வாதத் திறமையும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    சொத்துக் குவிப்பு வழக்கு

    சொத்துக் குவிப்பு வழக்கு

    கனிமொழிக்காக ராம்ஜேத்மலானி வாதம் செய்வதற்கு முன்னதாக முக ஸ்டாலின், கீ. வீரமணி, மத்திய திமுக அமைச்சர்கள் தீவிர ஆலோசனை நடத்தினர். அது போல் ஜெயலலிதாவுக்காக கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் ராம்ஜேத்மலானி வாதம் செய்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் வாதாடியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Ramjethmalani defenced Kanimozhi in 2G Spectrum case before that MK Stalin and more were discussed about the selection of advocate to defence Kanimozhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X