டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3 மாவட்ட மக்களா நீங்க.. மச்சக்காரங்கப்பா.. கைலாசாவுக்காக உங்கள இன்டர்வியூ எடுக்கிறது யார் தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்ட மக்களுக்கு கைலாசாவில் தொழில் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படும் என நித்தியானந்தா அறிவித்துள்ள நிலையில் அவர்களை நேர்காணல் நடத்த போவது ரஞ்சிதா என்பதையும் அறிவித்துள்ளார். இதனால் இளைஞர்கள் போட்டி போட்டு கொண்டு கைலாசாவின் குடிமகன்களாக விண்ணப்பித்து வருகிறார்கள்.

பாலியல் புகாரில் குற்றம்சாட்டப்பட்ட நித்தியானந்தா அப்புகாரில் ஆஜராகாமல் வெளிநாட்டுக்கு தப்பி சென்று கைலாசா என்ற தனித்தீவை உருவாக்கியதாக கூறப்படுகிறது. அவர் தினந்தோறும் சொற்பொழிவுகளை ஆற்றி வரும் நிலையில் அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் கைலாசா எனும் தனிநாட்டின் பிரதமர் தான்தான் என தெரிவித்தார். இதையடுத்து தனிக்கொடி, பாஸ்போர்ட் ஆகியவற்றை உருவாக்கிவிட்டார். இந்த நிலையில் கைலாசா நாட்டுக்கான ரிசர்வ் வங்கியும் தொடங்கப்பட்டதாக அறிவித்தார்.

மாஸ்க் புரோட்டா, கொரோனா தோசை சுட்டு தரோம்.. கைலாசாவில் இடம் கேட்டவர் மீது புகார்! மாஸ்க் புரோட்டா, கொரோனா தோசை சுட்டு தரோம்.. கைலாசாவில் இடம் கேட்டவர் மீது புகார்!

56 நாடுகளுடன் வர்த்தகம்

56 நாடுகளுடன் வர்த்தகம்

இதையடுத்து அவர் கைலாசா நாட்டுக்கான நாணயங்களையும் விநாயகர் சதுர்த்தியன்று வெளியிட்டுள்ளார். அதற்கு தமிழில் பொற்காசு என பெயர் வைத்துள்ளார். இந்த நிலையில் 56 இந்து நாடுகளுடன் மட்டுமே தான் வர்த்தகம் செய்ய விரும்புவதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

ஹோட்டல் திறப்பு

ஹோட்டல் திறப்பு

இதனிடையே மதுரை டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமார், நித்தியானந்தாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கைலாசாவில் தங்கள் ஹோட்டலை திறக்க அனுமதி அளிக்க வேண்டும். கைலாசா மக்களை கவர மாஸ்க் புரோட்டா, கொரோனா தோசை ஆகியவற்றை தயாரித்து தருகிறேன் என கூறியுள்ளார். இதற்கு நித்தியானந்தாவும் பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

கைலாசாவில் தொழில்

கைலாசாவில் தொழில்

அது போல் திருச்சியை சேர்ந்த நியூ சாரதாஸ் ஜவுளிக்கடை உரிமையாளரும் கைலாசா நாட்டில் தொழில் தொடங்க அனுமதி கோரியுள்ளார். இவருக்கும் அனுமதி அளித்துள்ள நித்தியானந்தா , கைலாசாவில் அனைத்து தொழில்களும் தொடங்கப்படும். அதே நேரம் தனது நாட்டிற்கு வருகை தரும் மக்களில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை ஆகிய 3 மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார் நித்யானந்தா.

கைலாசா நாடு

கைலாசா நாடு

நான் எங்கே இருக்கிறேன் என்பதை வெப் கேமராவில் தேடினாலும் தேடுவார்கள் என கூறிவிட்டு தனக்கே உரிய பாணியில் சிரிக்கிறார் நித்யானந்தா. கொரோனாவால் உலகமே அவதியடைந்து வரும் நிலையில் இந்த கைலாசா நாட்டை பற்றி பிரபலப்படுத்தி வரும் நித்தியானந்தா, அந்த நாடு எப்படியிருக்கும் என்பதை கண்ணில் காட்டுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இளைஞர்கள்

இளைஞர்கள்

இந்த நிலையில் மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி வியாபாரிகளுடன் ஒரு நிகழ்நிலை நேர்காணல் கூடிய விரைவில் Ma Nithyananda Mayi (ரஞ்சிதா ) அவர்களால் நடத்தப்படும் என நித்தியானந்தா குளுகுளு அறிவிப்பை விடுத்துள்ளார். இதனால் இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு கைலாசாவின் குடிமகன்களாக விண்ணப்பித்து வருகிறார்கள்.

English summary
Actress Ranjitha is going to conduct interview for Madurai, Tiruvannamalai and Kanchipuram district peoples. This was announced by Nithyananda.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X