டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பியூஷ்ஜி.. இப்படில்லாம் பண்ணுங்க.. நல்ல துட்டு கிடைக்கும்..ரவீந்திரநாத் குமார் தரும் செம ஐடியாக்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Theni MP Raveendranath : பியூஸுக்கு கோரிக்கை வைக்கும் ரவீந்திரநாத் குமார்- வீடியோ

    டெல்லி: மதுரையிலிருந்து போடிக்கும் திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கும் ரயில் சேவை தேவை என தேனி எம்பி ரவீந்திரநாத் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

    நாடாளுமன்றத்தில் ரயில்வே துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் கூறுகையில் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கான வாய்ப்பை வழங்கிய சபாநாயகருக்கு நன்றி. இன்று குரு பூர்ணிமா. எனவே உங்கள் முன்பும், உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்பும் பேசுவதற்கு நான் உண்மையில் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்.

    2019-2020-ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே துறை மீதான மானிய கோரிக்கையை முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் நான் ஆதரிக்கிறேன். சென்னை மத்திய சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எங்கள் கட்சியின் தலைவரான எம்ஜிஆரின் பெயரான புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமசந்திரன் ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்தமைக்கு முதலில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    இந்தியாவின் மிகப் பெரிய பயணிகள் மற்றும் சரக்கு ரயில் சேவையை கொண்டு வந்தமைக்கு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது துறையில் துரிதமாத அவர் செயல்படுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    அதுபோல் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வருவதற்கு குறித்த நேரத்தில் ஒப்புதல் வழங்கியமைக்கு நன்றி. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ரயில்வே துறை மிகவும் நலிவடைந்தது. தற்போது கடந்த 5 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறை விரைவு, சுத்தம், பாதுகாப்பு, நவீனமயம், விரிவாக்கம் என அனைத்து பிரிவுகளிலும் முன்னேறியுள்ளது.

    பட்ஜெட் நிரூபிக்கும்

    பட்ஜெட் நிரூபிக்கும்

    நமது இந்திய ரயில்வே வெறும் போக்குவரத்துக்கு மட்டும் உகந்ததல்ல. அது ஒரு வளர்ச்சி என்ஜின் என பிரதமர் மோடியே பாராட்டியுள்ளார். எனவே ரயில்வே துறை சாதாரண மக்களுக்கானது என்றும் நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சிறந்த சேவை, துரித சேவை, பாதுகாப்பான சேவையை வழங்கும் என்றும் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் நிரூபிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    உத்தேசம்

    உத்தேசம்

    நாடு முழுவதும் ரயில் சேவை விரிவாக்கம் செய்ய இந்திய ரயில்வே துறை முதலீடானது அதிகரிக்கப்பட வேண்டும் என கருதுகிறேன். 2030-ஆம் ஆண்டு வாக்கில் ரயில்வே உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக ரூ 50 லட்சம் கோடி தேவைப்படுவதாக உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது.

    மின்மயமாக்கல்

    மின்மயமாக்கல்

    இந்த இலக்கை அடைய பிரதமரும் ரயில்வே அமைச்சரும் நிச்சயம் முக்கிய பங்களிப்பர் என நம்புகிறேன். இந்திய ரயில்வேக்கு வருமானத்தை கொடுக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ரூ 6960 கோடியில் நாடு முழுவதும் 7000 கிலோ மீட்டர் தூரத்தினாலான ரயில்பாதையை மின்மயமாக்கப்படும் என அரசு முடிவு செய்துள்ளது.

    ரயில்வே துறை அமைச்சர்

    ரயில்வே துறை அமைச்சர்

    இதில் தமிழகத்தில் உள்ள 1,166 கி.மீ. தூரம் உள்ள ரயில்பாதைகள் மின்மயமாக்கப்படவுள்ளன. இந்த திட்டத்தை துரிதமாக செயல்படுத்தி உரிய நேரத்தில் முடிக்குமாறு நிதி அமைச்சர் மற்றும் ரயில்வே துறை அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

    திட்டம்

    திட்டம்

    ராமபூமிகளில் ஒன்றானது தனுஷ்கோடி. ராமர் இங்கு வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி இடையே இருந்த ரயில் பாதை கடந்த 1964-ஆம் ஆண்டு வந்த புயலால் முற்றிலும் சேதமடைந்தது. இந்த இருப்பு பாதைக்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். எனவே அந்த திட்டத்தையும் விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    திண்டுக்கல் டூ சபரிமலை

    திண்டுக்கல் டூ சபரிமலை

    மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் வரையிலான ரயில் பாதை மாற்றும் பணியை உடனடியாக முடிக்க வேண்டும் என கோருகிறேன். இது போல் திண்டுக்கல் முதல் போடி வழியாக சபரிமலை வரை உள்ள பாதையை மாற்றும் பணியையும் துரிதப்படுத்த வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் தமிழகம் மற்றும் கேரள மக்கள் பயனடைவர். இதனால் ரயில்வே துறைக்கு வருமானமும் கிடைக்கும். இந்த திட்டம் ஆரம்ப நிலையே உள்ளதால் அதை துரிதப்படுத்த வேண்டும் என்றார்.

    English summary
    Theni MP Raveendranath demands for rail service between Madurai to Bodi and also expedite into this matter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X