டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எழுதிய காகிதத்தின் மதிப்பு கூட அவர் எழுத்துக்கு கிடையாது.. பாக். அமைச்சரை கலாய்த்த இந்தியா

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிட கூடாது என்று, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், ரவீஸ்குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவின் உள்நாட்டு விஷயங்களில் தலையிடும் பாகிஸ்தான் தலைமையின் சமீபத்திய பேசசுக்களை, நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இவை மிகவும் பொறுப்பற்ற பேச்சுக்கள் ஆகும்.

Raveesh Kumar, MEA slams Pakistan

காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக, பாகிஸ்தான் அமைச்சர் ஷிரீன் மசாரி ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் எழுதப்பட்ட காகிதத்திற்கு இருக்கும் மதிப்பு கூட அவர் சொன்ன விஷயத்திற்கு இல்லை. அந்த கடிதத்திற்கு, பதில் சொல்வதன் மூலம் அதற்கு நம்பகத்தன்மையை வழங்க நான் விரும்பவில்லை.

காஷ்மீரில், எந்தவொரு மருத்துவமனையிலும் மருந்து பற்றாக்குறை ஏற்படவில்லை. ஒரு உயிர் கூட இழக்கப்படவில்லை, ஒரு புல்லட் கூட சுடப்படவில்லை. படிப்படியாக ஆனால் நேர்மறையான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

பயங்கரவாதத்தை அரசு கொள்கையாக பாகிஸ்தான் வைத்துள்ளது. ஒவ்வொரு முறையும் எங்கள் கவலைகளை அவர்களுக்கு உணர்த்தியுள்ளோம். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்க்குள், ஊடுருவ முயற்சிக்கிறார்கள் என்ற தகவலை நாங்கள் பெற்றுள்ளோம். பாகிஸ்தான் அதன் மண்ணில் செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

பாகிஸ்தான் ஒரு சாதாரண அண்டை நாட்டைப் போல நடந்து கொள்ளத் தொடங்குவது முக்கியம். சாதாரண அண்டை நாட்டுக்காரர்கள் என்ன செய்வார்கள்? நீங்கள் தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் தள்ளிவிட வேண்டாம். சாதாரணமாக பேசுங்கள், வர்த்தகம் செய்யுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
Letter by Pakistan Minister Shireen Mazari to the United Nations: The letter is not even worth the paper on which it was written. Don’t want to give credence to it by reacting, says Raveesh Kumar,MEA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X