டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதை நிறுத்தும் ரிசர்வ் வங்கி? பரபரப்பு தகவல்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Rs 2,000 notes Printing has been stopped

    டெல்லி: 2 ஆயிரம் நோட்டுகள் புழக்கம் வேகமாக குறைந்து வரும் நிலையில் புதிதாக 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு நாள் இரவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதன்பிறகு புதிதாக 2ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் உடனடியாக புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டது.

    500, 1000 ரூபாய் நோட்டுக்களை தான் கருப்பு பணமாக பணக்காரர்கள் பதுக்கி வைத்திருப்பதாக கூறி அதை ஒழிக்கும் நடவடிக்கைதான் செல்லாநோட்டு அறிவிப்பு என அப்போது விளக்கமாக சொல்லப்பட்டது.

    கனரா வங்கி உட்பட பல வங்கிகள் இணைப்பு, மொத்தமே இனி 12 பொதுத்துறை வங்கிதான்: நிர்மலா அதிரடிகனரா வங்கி உட்பட பல வங்கிகள் இணைப்பு, மொத்தமே இனி 12 பொதுத்துறை வங்கிதான்: நிர்மலா அதிரடி

    புழக்கம் இல்லை

    புழக்கம் இல்லை

    ஆனால் 500 மற்றும 1000 ரூபாயை விட 2000 நோட்டுக்கள் பதுக்குவதற்கு எளிதாக இருக்கும் என்று அப்போது புகார் எழுந்தது. இதனிடையே கடந்த இரண்டு ஆண்டுகளில் 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் கணிசமாக குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

    குறைந்தது புழக்கம்

    குறைந்தது புழக்கம்

    ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட ஆண்டு அறிக்கையின்படி, கடந்த 2017-18 நிதியாண்டில் 3,363 மில்லியன் நோட்டுகளாக இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை, 2018-19-ம் ஆண்டில் 3,291 மில்லியனாகக் (37 சதவீதமாக) குறைந்து உள்ளது. இதன் மூலம் சுமார் 72 மில்லியன் நோட்டுகள் ஓராண்டில் புழக்கத்தில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மதிப்பின் அடிப்படையில், கடந்த 2017-18 நிதியாண்டில் 6,72,600 கோடி இருந்த 2000 ஆயிரம் நோட்டுக்களின் மதிப்பு, 2018-19-ம் ஆண்டில் 6,58,200 ரூபாயாகக் குறைந்து உள்ளது.

    500 நோட்டு அதிகரிப்பு

    500 நோட்டு அதிகரிப்பு

    அதே நேரம் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை கடந்த 2017-18 நிதி ஆண்டை விட 2018-19 நிதி ஆண்டு உயர்ந்துள்ளது கடந்த 2017-18 நிதி ஆண்டில் 15,518 மில்லியனாக இருந்த 500 ரூபாய் நோட்டுக்கள், 2018-19 நிதி ஆண்டில் 21,518 மில்லியனாக உயர்ந்துள்ளது.

    51 சதவீதம் 500 ரூபாய் நோட்டுக்கள்

    51 சதவீதம் 500 ரூபாய் நோட்டுக்கள்

    2018- 2019 நிதி ஆண்டின்படி பார்த்தால் மொத்தமாக புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களில் 51 சதவீதம் 500 ரூபாய் நோட்டுக்கள் ஆகும். ஒட்டுமொத்த நோட்டுகளில் 82.2 சதவீதம் 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் ஆகும். இதனிடையே புதிதாக 2 ஆயிரம் நோட்டுக்கள் அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் 100 ரூபாய் நோட்டுக்களை சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

    English summary
    RBI annual report said the Rs 2,000 notes shrunk in terms of value and volume in the FY19. RBI is also mulling the introduction of new varnished Rs 100 notes but on a field trial basis first.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X