டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய அரசுடன் மோதல்.. ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் பதவி விலக முடிவு?! அதிர்ச்சி

மத்திய அரசுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் இன்று பதவி விலகுவார் என்று கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மத்திய அரசுடன் மோதல்.. உர்ஜித் பட்டேல் பதவி விலக முடிவு?- வீடியோ

    டெல்லி: மத்திய அரசுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் இன்று பதவி விலகுவார் என்று கூறப்படுகிறது.

    தற்போது மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. தொடர்ந்து பொருளாதார நிலை மோசமடைந்து வருவதால் மிகப்பெரிய பிரச்சனைகள் உருவெடுக்க தொடங்கி இருக்கிறது.

    ரிசர்வ் வங்கியை, மத்திய அரசு சுதந்திரமாக செயல்பட விடவில்லை என்று பெரிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இன்று ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் பதவி விலகுவார் என்று கூறப்படுகிறது.

    [10 நாட்களுக்குள் ரஃபேல் விமான விலை விவரம் தேவை.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு ]

    என்ன காரணம்

    என்ன காரணம்

    நேற்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி ரிசர்வ் வங்கிக்கு எதிராக கடுமையான கண்டனங்களை வைத்தார். 2008-2014 ரிசர்வ் வங்கி கடன்களை வாரி வழங்கி இருக்கிறது. இது பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்போது ஏற்பட்டு இருக்கும் பொருளாதார சீர்குலைவிற்கு அதுதான் காரணம் என்று அருண் ஜேட்லி குற்றச்சாட்டு வைத்தார்.

    கடும் குற்றச்சாட்டு

    கடும் குற்றச்சாட்டு

    மேலும் ரிசர்வ் வங்கி மத்திய அரசுடன் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து சரிய காரணம் ரிசர்வ் வங்கிதான். அதன் மோசமான பொருளாதார கொள்கைதான் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிய காரணம் என்று மொத்தமாக ஆர்பிஐ மீது அருண் ஜேட்லி பழியை தூக்கிப்போட்டார்.

    பதில் அளித்தார்

    பதில் அளித்தார்

    இந்த நிலையில் அவரின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் ஆர்பிஐ துணை கவர்னர் விரல் ஆச்சார்யா, ஆர்பிஐயின் அதிகாரத்தை பாஜக அரசு மட்டுப்படுத்த முயல்கிறது. ஆர்பிஐ அமைப்பின் சுதந்திரத்தில் தலையிட முயல்கிறது. இது பெரிய பொருளாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும். இப்போது உள்ள பொருளாதார சீர்கேட்டிற்கு மத்திய அரசுதான் காரணம் என்று கூறியுள்ளார்.

    விலகலா?

    விலகலா?

    இந்த நிலையில் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையில் உள்ள பிரச்சனை உச்சமும் அடைந்து இருக்கிறது. இது மீண்டும் சரி செய்ய முடியாத நிலையை அடைந்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்த நிலையில்தான் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் இன்று பதவி விலகுவார் என்று கூறப்படுகிறது. இன்று மாலைக்குள் இதுகுறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

    English summary
    RBI governor Urjit Patel may resign today as ruckus created with Central Government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X