டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

100 வருடங்களில் இல்லாத அளவுக்கு பொருளாதார சிக்கல்- ரிசர்வ் வங்கி ஆளுநர் பேச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: 100 வருடங்களில் இல்லாத அளவுக்கு பொருளாதார சிக்கல் நிலவுகிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா என்பது கடந்த 100 ஆண்டுகளில் மிக மோசமான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகும். இது உற்பத்தி, வேலை வாய்ப்பு துறைகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

RBI has strengthened its offsite surveillance mechanism to identify emerging risks: RBI Guv

இது உலகெங்கிலும் உள்ள வேல்யூ சங்கிலிகள், தொழிலாளர் மற்றும் மூலதன இயக்கங்களை முடக்கியுள்ளது.

நமது நிதி அமைப்பைப் பாதுகாக்கவும், தற்போதைய நெருக்கடியில் பொருளாதாரத்தை வளர்க்கவும், ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

காற்றில் குறுகிய தூரம் பரவும், அறிகுறி இல்லாதவர்களிடமிருந்தும் பரவும்: கொரோனா பற்றி WHO புது அப்டேட்காற்றில் குறுகிய தூரம் பரவும், அறிகுறி இல்லாதவர்களிடமிருந்தும் பரவும்: கொரோனா பற்றி WHO புது அப்டேட்

Recommended Video

    RBIயின் உதவியை அரசு எதிர்ப்பார்க்கலாம்

    கடந்த வருடம், பிப்ரவரி முதல், கொரோனா பாதிப்பு தொடங்கும் வரை ரெப்போ விகிதத்தை 135 அடிப்படை புள்ளிகளாக குறைத்தோம். அந்த நேரத்தில் வளர்ச்சியின் மந்தநிலையைச் சமாளிப்பதற்காக இது முக்கியமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை.

    நிதி அமைப்பில் ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் வங்கிகளின் சிறப்புத்தன்மை ஆகியவற்றை பாதுகாக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஒட்டுமொத்த வங்கி அமைப்பின் மொத்த செயல்படாத சொத்துக்கள் (NPA) மற்றும் நிகர NPA 2019-20ம் ஆண்டில் 8.3 சதவீதமாகவும், 2.2 சதவீதமாகவும் உள்ளன. முந்தைய மற்றும் 2018-19 ஆண்டில் மொத்த மற்றும் நிகர என்.பி.ஏக்களின் எண்ணிக்கை முறையே 9.1 மற்றும் 3.7 ஆக இருந்தது. என்.பி.ஏ கவரேஜ் விகிதமும் 2018-19ல் 60.5 சதவீதத்திலிருந்து 2019-20ல் 65.4 சதவீதமாக முன்னேறியுள்ளது.

    ரிசர்வ் வங்கி வழங்கிய கூடுதல் ரூ .50,000 கோடியால் பணப்புழக்கத்துடன் வங்கிகள் உத்வேகம் அடைய வாய்ப்பு உள்ளது. வணிகங்களுக்கு குறிப்பாக SME க்கள் மற்றும் விவசாயத் துறைக்கு மிகவும் தேவையான நிதி உதவிக்கு இது உதவும் என்று நம்புகிறோம். இது ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் பொருளாதார மீட்சிக்கு ஒரு உத்வேகத்தை வழங்கும்.

    2021 ஆம் ஆண்டில், சர்வதேச நாணய நிதியம் கணிப்புப்படி, இந்தியாவில் பொருளாதாரம் மீண்டு எழும். உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீத புள்ளிகளுக்கு அருகில் செல்ல வாய்ப்பு உள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் இந்தியா 7.4 சதவீதமாக வளர்ச்சியடைந்து, கூர்மையான திருப்புமுனையை பதிவுசெய்து, அதன் கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    இந்த கடினமான காலங்களில் வங்கி முறைக்கு உதவுவதற்காக குறைந்த பண இருப்பு விகிதம், குறைந்த பணப்புழக்க விகிதங்கள் உள்ளிட்ட பல தளர்வுகளை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.

    English summary
    RBI has strengthened its offsite surveillance mechanism to identify emerging risks, RBI Guv at 7th SBI Banking & Economics Conclave.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X