டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வட்டிக்கு வட்டி தள்ளுபடி.. யாருக்கெல்லாம் பொருந்தும்? மாத தவணை சலுகை நீட்டிக்கப்படுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக வங்கி கடனை கட்ட வழங்கப்பட்ட ஆறு மாத தவணை சலுகையை பயன்படுத்திய வாடிக்கையாளர்களுக்கு வட்டிக்கு வட்டி போடப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த சலுகை தனி நபர்கள் வாங்கிய கடன், வீட்டுக்கடன், சிறுதொழில் நிறுவனங்கள் , நிறுவனங்கள் வாங்கிய கடன், கல்வி கடன், நுகர்வோர் பொருட்கள் கடன், வாகன கடன், கிரிடிட் கார்டு கடன் ஆகியவற்றுக்கும் பொருந்தும்.

மத்திய அரசு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவித்தது. இதன் காரணமாக மக்கள் வேலைக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கினர்.

இதனால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனுக்கான மாதத்தவணையை திருப்பி செலுத்துவதில் இருந்து மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் 31 வரை 6 மாத காலம் மத்திய அரசு அவகாசம் வழங்கியது. எனினும் 6 மாத மாதத்தவணை செலுத்ததாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் என்று வங்கிகள் அறிவித்தன.

வட்டிக்கு வட்டி கூடாது

வட்டிக்கு வட்டி கூடாது

இதனால் இந்த சலுகையை பயன்படுத்திய பொதுமக்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், சிறுகுறு தொழில் நிறுவனங்கள் கடும் அதிர்ச்சி அடைந்தன. இதனிடையே மாத தவணை தள்ளிவைப்பு சலுகையை பயன்படுத்தியவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படும் நடைமுயை எதிர்த்து பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வட்டிக்கு வட்டி விதிப்பது குறித்து சரமாரி கேள்வி எழுப்பியது

சிக்கலான விஷயம்

சிக்கலான விஷயம்

இதையடுத்து கடந்த 28ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் விவகாரத்தில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. வட்டியை தள்ளுபடி செய்வது மிகவும் சிக்கலான விஷயம். இதனால் நாட்டிற்கு மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்படும். வங்கி தொழில் கடுமையாக பாதிக்கப்படும் என்று வாதிடப்பட்டது. அத்துடன் காலஅவகாசம் மத்திய அரசு சார்பில் கேட்கப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியது.

2 கோடி வரையில் கடன்

2 கோடி வரையில் கடன்

இதன்படி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.. அப்போது மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில், ரூ. 2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி விதிப்பு கிடையாது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த வட்டி சலுகை யார் யாருக்கெல்லாம் பொருந்தும் என்பதையும் கூறியுள்ளது.

தனிநபர் கடன்கள்

தனிநபர் கடன்கள்

இதன்படி ரூ.2 கோடி வரையில் கடன் வாங்கியுள்ள தனிநபர்கள், நிறுவனங்கள், சிறுகுறு தொழில் நிறுவனங்கள் உள்பட அனைத்து தரப்புக்கும் இதவரை செலுத்தாத 6 மாத தவணைகளுக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படாது.

வீட்டு கடன் நுகர்வோர் பொருட்கள் கடன்

வீட்டு கடன் நுகர்வோர் பொருட்கள் கடன்

தொழில் நிறுவன கடன்கள், தனிநபர்க் கடன்கள், கல்வி கடன்கள், வீட்டு வசதிக்கடன்கள், நுகர்வோர் பொருட்கள் வாங்க வாங்கிய கடன்கள், வாகன கடன்கள், கிரெடிட் கார்டு கடன்கள் ஆகியவற்றுக்கும் மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்திற்கு வட்டிக்கு வட்டி கிடையாது. இந்த தள்ளுபடியை அளிப்பதற்கான அனுமதி விரைவில் நாடாளுமன்றத்தில் பெறப்பட உள்ளது. இதனிடைய வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுவதால் 6 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று நிதியமைச்சம் கூறியிருந்தது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இதனிடையே கொரோனா பாதிப்பு இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு உச்சம் பெற்றுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக பல இடங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக இருப்பதால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வேலைக்கு சென்று பொருளாதாரம் ஈட்டுவது சிரமம் நீடிக்கிறது. சம்பளம் இல்லாமல் கடன்களை கட்ட முடியாமல் பலர் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே மத்திய அரசு மீண்டும் வங்கி கடன் தவணை நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. நாளை வழக்கு விசாரணைக்கு வரும் போது இதுபற்றி உச்ச நீதிமன்றம் ஏதேனும் உத்தரவு பிறப்பிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

English summary
RBI loan moratorium: Centre agrees to waive compounded interest for loans of up to Rs 2 crore. These loans include MSME loans, education loans, housing loans, and personal loans, among others, up to the amount of Rs 2 crore.‘
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X