டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பஞ்சத்தின் போது அளிக்க வேண்டிய தொகை.. இப்போது தந்தது ஏன்? கைமாறும் ரூ. 1.76 லட்சம் கோடியின் பின்னணி

மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் 1.76 லட்சம் கோடி ரூபாய் வாங்கியது ஏன் ?இது ஏன் இப்போது இவ்வளவு சர்ச்சையாகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா.. இந்த கட்டுரையை படியுங்கள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆர்பிஐயிடம் ரூ.1.76 லட்சம் கோடி வாங்கும் மத்திய அரசு.. வெளியாகும் பரபரப்பு குற்றச்சாட்டு

    டெல்லி: மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் 1.76 லட்சம் கோடி ரூபாய் வாங்கியது ஏன்? ரிசர்வ் வங்கி இவ்வளவு பணத்தை கையிருப்பில் வைத்து இருந்தது ஏன்? இது ஏன் இப்போது இவ்வளவு சர்ச்சையாகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா.. இந்த கட்டுரையை படியுங்கள்!

    நேற்று முதல்நாள் இரவு மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்தா தாஸ் இதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளார்.

    பல்வேறு பிரச்சனைகள் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த பணம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பின் நடந்த சில விஷயங்கள் அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் இருக்கிறது.

    காஷ்மீர் கலவரத்திற்கு பாகிஸ்தான்தான் காரணம்.. ராகுல் காந்தி திடீர் டிவிட்.. என்ன நடக்கிறது?காஷ்மீர் கலவரத்திற்கு பாகிஸ்தான்தான் காரணம்.. ராகுல் காந்தி திடீர் டிவிட்.. என்ன நடக்கிறது?

    பணம்

    பணம்

    ஆர்பிஐ எப்போதும் தனது கையிருப்பில் பல லட்சம் கோடி ரூபாய்களை வைத்து இருக்கும். உதாரணமாக உலகம் முழுக்க உள்ள நாடுகளின் சென்ட்ரல் வங்கிகள் 14% நிதியை அவசர தேவைக்காக கையிருப்பில் வைத்திருக்கும். இந்தியாவின் ஆர்பிஐ 28% நிதியை தனது கையிருப்பில் வைத்து இருக்கிறது.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    இந்த நிதியை அவசரகால தேவை நிதி, ஆர்பிஐ உபரி வருவாய் நிதி என்றெல்லாம் அழைப்பது உண்டு. இந்த பணம்தான் பொருளாதார சரிவுகள் ஏற்படும் போது ஆர்பிஐ மூலம் பயன்படுத்தப்படும். போர் போன்ற அசாதாரண சூழ்நிலை ஏற்படும் நேரங்களில் ஆர்பிஐ மூலம் இந்த பணம்தான் பயன்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தேவை

    தேவை

    பொதுவாக ஆர்பிஐ மூன்று விதமான தேவைகளுக்காக பணத்தை கையிருப்பில் வைத்து இருக்கிறது. முதல் கையிருப்பு பணம் மற்றும் தங்க மறுமதிப்பீடு கணக்கு நிதி என்று அழைக்கப்படுகிறது. இது டாலர் - ரூபாய் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களின் போது பயன்படுத்தப்படும் பணம் ஆகும். அடுத்து அவசரகால நிதி, இது அவசர தேவைகளை சரி செய்ய பயன்படுத்தப்படும் நிதி ஆகும். மூன்றாவது சொத்து மேம்பாட்டு நிதி எனப்படும் சொத்து சார்ந்த நிதி ஆகும்.

    எது அதிகம்

    எது அதிகம்

    இதில் எப்போதும் பணம் மற்றும் தங்க மறுமதிப்பீடு கணக்கு நிதிதான் அதிகமான கையிருப்பை கொண்டு இருக்கும். உதாரணமாக கடந்த வருட பணம் மற்றும் தங்க மறுமதிப்பீடு கணக்கு நிதி 6.91 லட்சம் கோடி ரூபாய். கடந்த 2010ல் இருந்தே பணம் மற்றும் தங்க மறுமதிப்பீடு கணக்கு நிதி அதிகமாகிக் கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.

    வேறு என்ன

    வேறு என்ன

    அதேபோல் கடந்த வருடம் அவசரகால நிதி 2.30 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதுவும் மிகவும் முக்கியமான நிதி கையிருப்பாக ஆர்பிஐ மூலம் கருதப்படுகிறது. கடைசியாக சொத்து மேம்பாட்டு நிதி சிறிதளவு நிதி கையிருப்பை கொண்டு இருக்கிறது. இந்த மூன்றும்தான் தற்போது ஆர்பியிடம் இருக்கும் நிதி கையிருப்புக்கு அல்லது உபரி நிதிக்கு காரணம் ஆகும்.

    கேட்டது ஏன்?

    கேட்டது ஏன்?

    இதைத்தான் மத்திய அரசு பல மாதங்களாக கேட்டுக்கொண்டு இருந்தது. 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பணம் வேண்டும் என்று மத்திய அரசு பல மாதங்களாக கேட்டுக்கொண்டு இருந்தது. முன்னாள் ஆர்பிஐ கவர்னர்கள் உர்ஜித் பட்டேல், ரகுராம் ராஜன் இருந்த போதும் பணம் கேட்கப்பட்டது. ஆனால் அவர்கள் இரண்டு பேருமே பணம் கொடுக்க மறுத்துவிட்டனர்.

    எப்படி

    எப்படி

    இதை மத்திய அரசு எதிர்த்தது. உலகம் முழுக்க எந்த நாட்டு மத்திய வங்கியும் இவ்வளவு பணத்தை கையிருப்பில் வைக்கவில்லை. ஆர்பிஐதான் அதிகமாக பணம் வைத்து இருக்கிறது என்று கூறியது. இதனால் ஆர்பிஐயிடம் எப்படி பணம் வாங்குவது என்று திட்டமிட்ட மத்திய அரசு அதற்காக குழு ஒன்றை அமைத்தது. கடந்த வருடம் நவம்பர் மாதம் முன்னாள் ஆர்பிஐ கவர்னர் பிமல் ஜலன் தலைமையில் இதற்காக குழு அமைக்கப்பட்டது.

    என்ன பரிந்துரை

    என்ன பரிந்துரை

    ஆர்பிஐ வைத்திருக்கும் நிதியை ஆராய்ந்த இந்த குழு ஒரு பரிந்துரையை செய்தது. அதன்படி ஆர்பிஐ அவசரகால நிதி கையிருப்பாக 5.5-6.5% பணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூறியது. ஆனால் தற்போது ஆர்பிஐயிடம் அவசர கால நிதியாக 6.8% இருக்கிறது. இதனால் 5.5% மட்டும் வைத்துக் கொண்டு மீதம் உள்ள 1.3% திருப்பி கொடுக்க ஆர்பிஐக்கு பரிந்துரை செய்தது.

    என்ன மதிப்பு

    என்ன மதிப்பு

    இதன் மதிப்பு 52,637 கோடி ரூபாய் ஆகும். அதேபோல் பணம் மற்றும் தங்க மறுமதிப்பீடு கணக்கு நிதியாக 20-24.5% கையிருப்பு வைக்கலாம் என்று கூறியது. தற்போது பணம் மற்றும் தங்க மறுமதிப்பீடு கணக்கு நிதியாக 23.3% இருக்கிறது. இதனால் இதற்கு மேல் வரும் பணத்தை அரசிடம் கொடுக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

    மொத்தம் எல்லாம்

    மொத்தம் எல்லாம்

    இதன் மதிப்பு 1,23,414 ரூபாய் ஆகும். இதனால் மொத்தமாக 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியை ஆர்பிஐ தனது கையிருப்பில் இருந்து மத்திய அரசுக்கு கொடுக்கிறது. இந்த பரிந்துரை மூலமே மத்திய அரசு ஆர்பிஐயிடம் இருந்து பணத்தை பெறுகிறது.

    எவ்வளவு கேட்டது

    எவ்வளவு கேட்டது

    கடந்த பட்ஜெட் தாக்கலுக்கு முன் மத்திய அரசு ஆர்பிஐயிடம் 90 ஆயிரம் கோடிதான் கேட்டது. ஆனால் மத்திய அரசுக்கு தற்போது கூடுதலாக 86 ஆயிரம் கோடி அளித்துள்ளது. இது மத்திய அரசுக்கு அடித்த ஜாக்பாட் என்று கூட கூறலாம். இத்தனை மாதமாக காத்திருந்து தற்போது கேட்டதை விட அதிகமாக ஆர்பிஐயிடம் இருந்து மத்திய அரசு பெற்றுள்ளது.

    என்ன சொல்கிறார்கள்

    என்ன சொல்கிறார்கள்

    இது கண்டிப்பாக தற்காலிகமாக பொருளாதார தேவையை சரிக்கட்ட உதவும். தற்போது இருக்கும் பிரச்னையை இது சமாளிக்க உதவும். ஆர்பிஐ அமைப்பிடம் நிறைய பணம் இருப்பதால் இப்போது அவர்களுக்கு இதனால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

    ஆனால் சிக்கல்

    ஆனால் சிக்கல்

    ஆனால் இன்னொரு பக்கம் மத்திய அரசின் இந்த முடிவிற்கு பொருளாதார வல்லுனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்கள். ஆர்பிஐ வைத்திருக்கும் உபரி நிதி என்பது மிக மிக அவசர தேவைக்கு மட்டும்தான். அரசின் கஜானா காலியாகிறது. போர் வருகிறது, ஒரே நாளில் பொருளாதாரம் மோசமடைந்தது என்றால் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும், என்றுள்ளனர்.

    என்ன சரிவு

    என்ன சரிவு

    ஆனால் அரசு தற்போது ஏற்பட்ட பொருளாதார சரிவை சரி செய்ய எல்லாம் பணம் வாங்குகிறது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டால் இது பெரிய சிக்கலை ஏற்படுத்தும். நாளையே பொருளாதாரத்தில் இதனால் என்ன பிரச்சனை வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    English summary
    RBI rolls out RS. 1.76 Lakh Cr to Central Government: All you need to know about the issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X