டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மல்லையா , நீரவ் மோடி உள்பட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி.. ரிசர்வ் வங்கி

Google Oneindia Tamil News

டெல்லி: வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் தப்பியோடிய நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தொழில்நுட்ப ரீதியாக தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Recommended Video

    அதிர்ச்சி..! 50 தொழில் அதிபர்களின் ரூ.68,000 கோடி கடன் தள்ளுபடி!

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் நிறுவனங்கள் செயல்படாமல் முடங்கிப் போயுள்ளன.

    நிதி நிலையை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் வங்கிகளின் நிலை படுமோசமாக உள்ளது . எப்படி என்றால் தொழில் துறையினருக்கு கடன் வழங்க ரிசர்வ் வங்கி உதவி அளிக்க வேண்டிய நிலையில் உள்ளன.

    ஒருபக்கம் குடிக்கவே கூழ் இல்லை.. இன்னொரு பக்கம் தொழிலதிபர்களின் ரூ70,000 கோடி கடன்கள் தள்ளுபடியாம்!ஒருபக்கம் குடிக்கவே கூழ் இல்லை.. இன்னொரு பக்கம் தொழிலதிபர்களின் ரூ70,000 கோடி கடன்கள் தள்ளுபடியாம்!

    50 தொழில் அதிபர்கள்

    50 தொழில் அதிபர்கள்

    இந்த சூழ்நிலையில் வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் தப்பியோடிய நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியும் மூலம் அம்பலமாகியுள்ளது.

    நீரவ் மோடி

    நீரவ் மோடி

    பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் சுமார் 90000 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். இதேபோல் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரும் பல வங்கிகளில் பணம் கடன் வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். இதே போல் பல தொழில் அதிபர்களும் பல கோடி ரூபாய் வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளார்கள்.

    சிபிஐ வழக்கு

    சிபிஐ வழக்கு

    இப்படி கடன் வாங்கிவிட்டு மோசடியில் ஈடுபட்டு தப்பி ஓடிய பல தொழில் அதிபர்களை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. விஜய் மல்லையா , நீரவ் மோடி, உள்பட பல தொழில் அதிபர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அமலாக்கத்துறையும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றது.

    கடன் பெற்றவர்கள்

    கடன் பெற்றவர்கள்

    இந்த நிலையில், சாகேத் கோகலே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கி கடன் மோசடி பட்டியலில் முதல் 50 இடங்களில் இருப்பவர்களின் பெயர்களை தெரிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியிடம் கேட்டிருந்தார். கடந்த 24-ந்தேதி ரிசர்வ் வங்கி அவருக்கு பதில் அளித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி நிலவரப்படி வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத 50 பேரின் பெயர்களையும், எவ்வளவு கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டது என்ற விவரத்தையும் கூறியுள்ளது . மொத்தம் ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடன் தொழில் நுட்ப ரீதியாகவும், விவேகமான நடவடிக்கைக்காகவும் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி தனது பதிலில் தெரிவித்துள்ளது. இதனிடையே இது நடைமுறைகளின்படி கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்வதுதான் என்றும் அவர்களிடம் இருந்து கடனை வசூலிக்கும் நடைமுறை தொடரும் என்றும் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

    ராம்தேவ்

    ராம்தேவ்

    தள்ளுபடி செய்யப்பட்ட நபர் மற்றும் கடன் விவரம் வருமாறு: மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் -ரூ.5,492 கோடி. ஆர்.இ.ஐ. அக்ரோ நிறுவனம் -ரூ.4,314 கோடி.
    வின்சம் டயமண்ட்ஸ் -ரூ.4,076 கோடி
    ரோட்டேமேக் குளோபல் நிறுவனம் -ரூ.2,850 கோடி. குடோஸ் கெமி -ரூ.2,326 கோடி. ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்துக்கு சொந்தமான ருச்சி சோயா -ரூ.2,212 கோடி.

    மெகுல் சோக்சி

    மெகுல் சோக்சி

    சூம் டெவலப்பர்ஸ் -ரூ.2,012 கோடி. விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் -ரூ.1,943 கோடி. பிரீசியஸ் ஜூவெல்லரி அண்டு டயமண்ட்ஸ் -ரூ.1,962 கோடி. மெகுல் சோக்சியின் கிலி இந்தியா மற்றும் நட்சத்திரா நிறுவனங்கள் -ரூ.1,447 கோடி, மற்றும் ரூ.1,109 கோடி.

    English summary
    Loans worth Rs 68,000cr written off: Wilful defaulters include Mallya, Choksi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X