டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய அரசு vs ஆர்பிஐ.. மிகப்பெரிய பிரச்சனைக்கு காரணமான செக்சன் 7.. வெளிவரும் உண்மைகள்!

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு இடையில் நடக்கும் மோதலுக்கு மத்திய அரசு பயன்படுத்திய செக்சன் 7 விதிதான் காரணம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மத்திய அரசுடன் மோதல்.. உர்ஜித் பட்டேல் பதவி விலக முடிவு?- வீடியோ

    டெல்லி: மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு இடையில் நடக்கும் மோதலுக்கு மத்திய அரசு பயன்படுத்திய செக்சன் 7 விதிதான் காரணம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே செல்கிறது. இருவருக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது.

    தொடர்ந்து பொருளாதார நிலை மோசமடைந்து வருவதால் மிகப்பெரிய பிரச்சனைகள் உருவெடுக்க தொடங்கி இருக்கிறது. ரிசர்வ் வங்கியை, மத்திய அரசு சுதந்திரமாக செயல்பட விடவில்லை என்று பெரிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

    கலைக்க போவது யாரு.. கலக்க போவது யாரு.. இதுதான் இப்போதைய பரபர அரசியல் விவாதம் கலைக்க போவது யாரு.. கலக்க போவது யாரு.. இதுதான் இப்போதைய பரபர அரசியல் விவாதம்

    ப.சிதம்பரம் என்ன சொன்னார்

    ப.சிதம்பரம் என்ன சொன்னார்

    ஆர்பிஐக்கும் மத்திய அரசுக்கு தொடர்ந்து நிலவி வரும் பிரச்சனைகளை கவனமாக கருத்தில் கொண்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மிக முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்தார். அதன்படி மத்திய அரசு எப்போதும் ஆர்பிஐ விதியான செக்சன் 7ஐ பயன்படுத்த கூடாது. ஆனால் தற்போதைய மத்திய அரசு அதை பயன்படுத்துகிறது. இது மிகப்பெரிய குற்றம் என்று கூறினார்.

    அப்படி என்றால்

    அப்படி என்றால்

    இவர் செக்சன் 7 என்று கூறிய பின்தான் அப்படி ஒரு விதி ஆர்பிஐ மீது திணிக்கப்பட்டு இருப்பதே பலருக்கு தெரியும். அதன்பின்தான் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு இடையில் நடக்கும் மோதலுக்கு மத்திய அரசு பயன்படுத்திய செக்சன் 7 விதிதான் காரணம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆர்பிஐ விதியின் படி செக்சன் 7 என்பது மத்திய அரசுக்கு சிறப்பு அதிகாரம் வழங்க கூடியது. ஆர்பிஐ சுதந்திரமாக இயங்கும் அமைப்பு ஆகும். ஆனால் செக்சன் 7ஐ பயன்படுத்தி மத்திய அரசு ஆர்பிஐக்கு உத்தரவுகளை பிறப்பிக்கலாம். அப்படி பிறப்பிக்கும்பட்சத்தில் ஆர்பிஐ அதை பின்பற்ற வேண்டும்.

    இதற்கு முன் பயன்படுத்தியது இல்லை

    இதற்கு முன் பயன்படுத்தியது இல்லை

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இதற்கு முன் எந்த அரசும் இந்த விதியை பயன்படுத்தியது இல்லை. 1991ல் நடந்த எமெர்ஜென்சி, 2008 வந்த பொருளாதார பிரச்சனை என எதிலும் மத்திய அரசு இந்த விதியை பயன்படுத்தி ஆர்பிஐ அமைப்பை கட்டுப்படுத்தவில்லை. அப்போதெல்லாம் ஆர்பிஐ சுதந்திரமாகவே இயங்கியது.

    இப்போது பயன்படுத்துகிறது

    இப்போது பயன்படுத்துகிறது

    ஆனால் தற்போது ஆர்பிஐ அதிகமாக கடன் கொடுக்கிறது என்று கூறி அந்த விதியை மத்திய அரசு பயன்படுத்தி இருக்கிறது. கடந்த ஒரு மாதமாக ஆர்பிஐ அமைப்பிற்கு மத்திய அரசு இந்த விதிகள் மூலம் நிறைய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தற்போது ஆர்பிஐ மற்றும் மத்திய அரசுக்கு இடையில் நிலவும் பிரச்னைக்கு இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

    English summary
    RBI vs Central Government: Unused rule no Section 7 made everything worst.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X