டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீவிரவாதத்தை ஒழிக்க நாங்க தயாராக இருக்கோம்... நீங்க ரெடியா? பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: தீவிரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக இருப்பதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தேசிய புலனாய்வு முகமைக்காக டெல்லி மற்றும் கவுகாத்தியில் 2 புதிய வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. அந்த வளாகங்களை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

 rajnath singh

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, தீவிரவாதத்திற்கு எதிராக திட்டவட்டமான போரை முன்னெடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது. என்ஐஏவின் ஆற்றல்மிக்க செயல்பாடுகளால் தீவிரவாத செயல்களுக்கு நிதி கிடைப்பது குறைந்திருக்கிறது.

மத்திய, மாநில விசாரணை அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் கள்ள நோட்டுகள் ஊடுருவுவது குறைந்துள்ளது. ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆராய, என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமையில் தனிப் பிரிவை ஏற்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

என்னை பாக். ராணுவம் மனரீதியாக துன்புறுத்தியது... முதல்முறையாக மனம் திறந்த அபிநந்தன் என்னை பாக். ராணுவம் மனரீதியாக துன்புறுத்தியது... முதல்முறையாக மனம் திறந்த அபிநந்தன்

என்ஐஏ பதிவு செய்யும் வழக்குகளில், குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுத்தரும் விகிதம் 92 சதவீதமாக உள்ளது. இஸ்லாமிய நாடுகளிடம் இருந்து இந்தியா அபரிமிதமான ஆதரவை பெற்றுள்ளது என்றார்.

English summary
Union Home Minister Rajnath Singh on said the country was ready to extend support to Pakistan to deal with the menace of terrorism on the neighbour's soil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X