டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்தடுத்த வார்னிங்.. டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு திடீர் தடை.. அரசின் முடிவிற்கு என்ன காரணம்?

Google Oneindia Tamil News

டெல்லி: டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு திடீரென தடை விதித்ததற்கு என்ன காரணம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Recommended Video

    59 Chinese appsக்கு தடை..மத்திய அரசு அதிரடி

    டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு அதிரடி தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தடை செய்யப்பட அனைத்து செயலிகளும் சீனாவை சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. லடாக் சண்டை நிலவி வரும் நிலையில் இப்படி சீனாவின் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவிற்கு இது பெரிய அதிர்ச்சியாக மாறியுள்ளது.

    டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி.. பரபரப்பு! டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி.. பரபரப்பு!

    என்ன தடை

    என்ன தடை

    டிக்டாக் - TikTok, ஷேர் இட்- Shareit, யுசி பிரவுசர் - UC Browser, ஹெலோ - Helo, எம்ஐ கம்யூனிட்டி - Mi Community, செண்டர் - Xender உள்ளிட்ட 59 செயலிகள் இதில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவு 69ஏ சட்டத்தின் கீழ் இந்த தடையை கொண்டு வந்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும் நேர்மைக்கு எதிராகவும், இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராகவும் செயல்பட்டதாக அரசு தனது ஆணையில் குறிப்பிட்டு உள்ளது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இந்த தடைக்கான காரணத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், மத்திய அரசு இந்த செயலிகளை நீண்ட நாட்களாக ஆராய்ச்சி செய்தும் கண்காணித்தும் வந்தது. இந்த கண்காணிப்பின் முடிவில் இந்த 59 செயலிகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவிற்கு பாதுகாப்பிற்கு எதிராக பல விஷயங்களை இந்த செயலிகள் செய்துள்ளது.

    எப்படி செயலிகள்

    எப்படி செயலிகள்

    அதில் முதலாவதாக இந்த செயலிகள் இந்தியாவின் இறையாண்மைக்கும் உட்கட்டமைப்புக்கும் எதிராக செயல்பட்டுள்ளது. அடுத்த காரணம் இந்த செயலிகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக உள்ளது. இந்த செயலிகளுக்கு எதிராக நிறைய புகார்கள் வந்துள்ளது. இதை பலர் தவறான விஷயங்களுக்காக பயன்படுத்தியதாக புகார்கள் வந்துள்ளது .

    டேட்டாக்களை விற்றது

    டேட்டாக்களை விற்றது

    அதேபோல் இந்த செயலிகள் மக்கள் குறித்த டேட்டாக்களை தவறாக பயன்படுத்தியதாகவும் புகார்கள் வந்துள்ளது. மக்களின் டேட்டாக்களை பெற்று அதை சீனாவில் தவறுதலாக பயன்படுத்தியதாக புகார்கள் வந்துள்ளது. அதேபோல் இதில் சில செயலிகள் சைபர் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் புகார்கள் வந்துள்ளது. மக்களை முறையின்றி இந்த செயலிகள் கண்காணித்துள்ளது. இது தொடர்பாக Indian Cyber Crime Coordination Centre எனப்படும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்திற்கு அடுத்தடுத்து நிறைய புகார்கள் வந்துள்ளது.

    சைபர் தாக்குதல்

    சைபர் தாக்குதல்

    இந்தியாவில் சைபர் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் கணினி அவசர கால பதில் அளிக்கும் குழுவான CERT (Computer Emergency Response Team CERT-IN) இந்த செயலிகள் ஹேக்கிங் செயல்களில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. மக்களின் டேட்டாக்களை அவர்களின் அனுமதி இன்றி இந்த செயலிகள் திருடுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்படி தொடர்ச்சியாக வந்த புகார்களை தொடர்ந்தே இந்த செயலிகள் மீது தடை விதிக்கப்பட்டு இருக்கிறது என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    English summary
    The reason behind India's ban on 59 apps including Tik Tok and UC browser.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X