டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இவைதான்!

Google Oneindia Tamil News

டெல்லி: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது.

ஜேடிஎஸ்-காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். ஆனால் இவர்களது ராஜினாமா மீது சபாநாயகர் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.

Rebel MLAs not compelled to participate in trust vote, says SC

இதையடுத்து ராஜினாமா செய்த 10 எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலையிலான பெஞ்ச் விசாரித்து இன்று தீர்ப்பளித்தது.

எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த கூடாது.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் நாளை கவிழுகிறது கர்நாடக அரசு? எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த கூடாது.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் நாளை கவிழுகிறது கர்நாடக அரசு?

இத்தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

  • எம்.எல்.ஏக்கள் ராஜினாமா குறித்து கர்நாடகா சபாநாயகர் முடிவெடுக்கலாம்.
  • சபாநாயகர் தமது முடிவெடுக்கும் காலவரையறையை அவரே நிர்ணயித்து கொள்ளலாம்.
  • சபாநாயகர் முடிவெடுக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க முடியாது
  • அப்படி முடிவு எடுக்கும் போது உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை அவர் கருத்தில் கொள்ள தேவை இல்லை.
  • சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என சபாநாயகர் வலியுறுத்தக் கூடாது.
  • அதாவது ஜேடிஎஸ்- காங்கிரஸ் கட்சிகளின் கொறடாக்களின் உத்தரவு இந்த எம்.எல்.ஏக்களை கட்டுப்படுத்தாது.
  • தற்போது பிறப்பிக்கப்பட்டிருப்பது இடைக்கால உத்தரவு மட்டுமே.
  • இவ்வழக்கில் சபாநாயகரின் அதிகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அது தொடர்பாக விரிவான விசாரணை பின்னர் நடத்தப்படும்.

இவ்வாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

English summary
The Supreme Court said that the Rebel MLAs will not be compelled to attend the House proceedings tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X