டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனாவை நம்ப முடியாதுனு சொன்னது சரியாகிடுச்சே!.. படைகளை முழுவதுமாக வாபஸ் பெறவே இல்லை.. ஆதாரம் இதோ!

Google Oneindia Tamil News

டெல்லி: லடாக் அருகே பாங்காங் ஏரிப் பகுதியில் உள்ள ஃபிங்கர் 4 மற்றும் ஃபிங்கர் 8 பகுதிகளில் சீன படைகள் முற்றிலும் பின்வாங்கியதாக செய்திகள் சொல்லப்பட்டாலும் நிஜத்தில் அப்படியில்லை. ஆம், ஃபிங்கர் 4 பகுதியில் அவை ஒரு பகுதியாகவே வாபஸ் பெறப்பட்டுள்ளன என்பதை செயற்கைகோள் படங்கள் காட்டுகின்றன.

Recommended Video

    CHINA படைகள் பற்றி வெளியான Satellite photos

    கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மே மாதம் முதல் இந்தியா- சீனா இடையே மோதல் போக்கு இருந்தது. கடந்த மே மாதம் 5-ஆம் தேதி கைகலப்பும் நடந்தது. இதையடுத்து சுமூக தீர்வுக்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோதே ஜூன் 15-ஆம் தேதி சீன ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர்.

     விண்ணில் ஏவிய ஒரே நிமிடத்தில் வெடித்து சிதறிய சீனாவின் ராக்கெட்.. என்ன காரணம்! விண்ணில் ஏவிய ஒரே நிமிடத்தில் வெடித்து சிதறிய சீனாவின் ராக்கெட்.. என்ன காரணம்!

    படைகள்

    படைகள்

    இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சீனா மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தக் கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் ராணுவ கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் இரு நாட்டு ராணுவத்தினரும் தங்கள் படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

    செயற்கைகோள் படங்கள்

    செயற்கைகோள் படங்கள்

    லடாக்கில் பிரதமர் மோடி ஆய்வுக்கு பின்னர் இது போன்றதொரு பின்வாங்கல் ஏற்பட்டதாக பேசப்பட்டது. எனினும் 1962-ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை மேற்கோள்காட்டி சீனாவை நம்பக் கூடாது, இந்திய ராணுவம் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போதைய நிலை குறித்து இரு செயற்கைகோள் படங்கள் வெளியாகியுள்ளன.

    ஃபிங்கர் 4 பகுதி

    ஃபிங்கர் 4 பகுதி

    ஸ்கைசேட் என்ற செயற்கைகோள் பிடித்த படங்கள் இந்தியா டுடேவுக்கு பிரத்யேகமாக கிடைக்கப்பெற்றன. அந்த படங்களில் சீன ராணுவம் முற்றிலும் பின்வாங்கவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது. பாங்காங் சோ ஏரி பகுதியில் சாலை அளவிலான பகுதிகளில் மட்டும் ராணுவம் பின்வாங்கியதாக தெரிகிறது. அதாவது ஃபிங்கர் 4 பகுதியில் ஒருபகுதியாக மட்டுமே சீன ராணுவம் பின்வாங்கியது.

    சீன ராணுவம்

    சீன ராணுவம்

    ஃபிங்கர் 4 பகுதியின் உச்சியிலிருந்து சீன ராணுவத்தினர் தங்குவதற்காக பயன்படுத்திய கேம்ப்கள் இன்னும் அகற்றப்படவில்லை. அது போல் அங்கிருந்து ஆயுதங்களை அப்புறப்படுத்தியதற்கான அடையாளங்களும் இல்லை. ஜூலை 10-ஆம் தேதி எடுக்கப்பட்ட படத்தில் குறிப்பிட்ட இடத்தில் டென்ட்கள் நீக்கப்படவில்லை. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் அடுத்த வாரத்தில் ராணுவ கமாண்டர் அளவிலான 4ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் நல்ல முடிவுகள் எட்டப்படும் என தெரிவித்துள்ளன.

    English summary
    Satellite images shows China's partial pullback in Finger 4 area of Pangong Tso.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X