டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடைமழை.. உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரெட்அலர்ட்.. பத்ரிநாத் யாத்திரை நிறுத்தம்.. தீவிர முன்னெச்சரிக்கை

பலத்த மழை காரணமாக பத்ரிநாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: தொடர் கனமழை காரணமாக உத்தரகாண்ட் மாநிலத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது... முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்ரிநாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது,, மேலும் தலைநகர் டெல்லி உட்பட பல்வேறு மாநில தலைநகரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

Recommended Video

    விடாது வெளுத்து வாங்கும் கனமழை… உத்தரகாண்ட்டில் ரெட்அலெர்ட்… பத்ரிநாத் யாத்திரை நிறுத்தம்

    இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.. இதில் மிக மோசமாக உள்ளது கேரள மாநிலம்தான்.

    இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்

    இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது... இதன் காரணமாக, சபரிமலை கோவிலுக்கு இன்றும் நாளையும் செல்ல வேண்டாம் என்று பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது..

    கோட்டயம்

    கோட்டயம்


    மற்றொரு பக்கம் மீட்பு பணிகள் தீவிரமாகி உள்ளன.. கோட்டயம், இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.. கோட்டயம் மாவட்டம் கூட்டிக்கல் பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவில் 13 பேர் உயிரிழந்தனர்... அதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. இன்றைய நிலவரப்படி, கேரள மழை பாதிப்புகளில் சிக்கி மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..

    நிலச்சரிவு

    நிலச்சரிவு

    அங்கு தொடர்மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி நேற்றைய தினம் கேட்டறிந்ததுடன், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்திருக்கிறார். அதேபோல, உத்தரக்காண்ட் மாநிலத்திலும் ஏற்கனவே கனமழை பெய்து வருகிறது... இந்நிலையில், அக்டோபர் 18-ம் தேதியான இன்று மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

     ரெட் அலர்ட்

    ரெட் அலர்ட்

    இதையடுத்து, உடனடியாக அந்த மாநிலத்துக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது... இதேபோல், இன்று முதல் வருகிற 19ந்தேதி வரை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் அந்த மாநிலத்தில் விடப்பட்டு உள்ளது... உத்தரகாண்ட் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய அரசு, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள உத்தர காண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது.

     மிதமான மழை

    மிதமான மழை


    இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பத்ரிநாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது... தலைநகர் டெல்லியிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்று அதிகாலையில் கனமழை பெய்தது... உத்தர பிரதேசத்திலும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது...

     எச்சரிக்கை

    எச்சரிக்கை

    ஜம்மு காஷ்மீர், லடாக், இமாச்சல பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட், அரியானா, பஞ்சாப், சண்டிகர், உத்தர பிரதேசம், வடகிழக்கு ராஜஸ்தான், வடக்கு மத்திய பிரதேசம், மேற்கு வங்காளத்தில் கங்கை நதிக்கரையோர பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. அந்தந்த மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு வருகின்றன.

    English summary
    Red Alert in Uttarkhand and Heavy Rain lashes parts of Delhi adjoining areas Badrinath
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X