டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பினராயி.. பழனிசாமி.. உத்தவ்.. இந்திய அரசியலில் மாநில சுயாட்சியின் எழுச்சி.. கொரோனா உணர்த்திய உண்மை!

கொரோனாவிற்கு எதிராக இந்தியா முழுக்க மாநில முதல்வர்கள், மாநில கட்சிகள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவிற்கு எதிராக இந்தியா முழுக்க மாநில முதல்வர்கள், மாநில கட்சிகள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Recommended Video

    கொரோனாவை கட்டுபடுத்த சிகிச்சை - பெங்களூரு டாக்டர் அதிரடி

    ஒரே நாடு.. ஒரே மொழி.. ஒரே கொள்கை.. என்று ஒற்றை கோட்பாட்டை நாடு முழுக்க கொண்டு செல்வதுதான் மத்திய அரசின் கொள்கையாக இருந்து வருகிறது. இதில் மிகப்பெரிய அளவிற்கு பாஜக வெற்றியும் பெற்றுவிட்டது என்று கூறலாம். பல மாநிலங்களில் பாஜக தனித்து ஆட்சி, சில மாநிலங்களில் கூட்டணி ஆட்சி என்று பாஜக அசுர வளர்ச்சி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது.

    பாஜகவின் இந்த முழு தேசியவாத கொள்கையை மக்களும் பெரிய அளவில் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். முக்கியமாக வட இந்தியாவில், ஏன் கர்நாடகா வரை கூட இந்த தேசியவாத கொள்கைகள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் 2 வயது குழந்தை உள்பட 3 பேர் மரணம் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் 2 வயது குழந்தை உள்பட 3 பேர் மரணம்

    மாநில சுயாட்சி நிலை என்ன

    மாநில சுயாட்சி நிலை என்ன

    பாஜகவின் இந்த திடீர் வளர்ச்சி, கடந்த ஐந்து வருட அரசியல் மாற்றங்கள் எல்லாம் மாநில சுயாட்சி மீதான கேள்வியை எழுப்பி உள்ளது. மாநில சுயாட்சி இனியும் சாத்தியமா, மாநில கட்சிகளுக்கு அதே வலிமை இருக்குமா என்று கேள்வி எழுந்தது. ஆனால் கடந்த சில சட்டமன்ற, லோக்சபா தேர்தல்களில் திமுக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எழுச்சி, பாஜகவிற்கு கொஞ்சம் அதிர்ச்சி அளித்தது.

    கேள்வியும் பதிலும்

    கேள்வியும் பதிலும்

    இந்த நிலையில் இந்தியாவிற்கு தேசியவாத அரசியல் சரியாக இருக்குமா, மாநில சுயாட்சி சரியாக இருக்குமா என்று கேள்விகள் எழுந்துள்ளது. அதற்கு மிக சரியான பதிலை தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் அளித்துள்ளது. ஆம் கஷ்டமான சூழ்நிலைகள்தான் ஒரு நாட்டின் நிலையை, அரசியல் சூழ்நிலையை மக்களுக்கு உணர்த்தும். அந்த வகையில் கொரோனா வைரஸ், இந்தியாவிற்கு மாநில சுயாட்சிதான் சிறந்தது என்பதை உணர்த்தி இருக்கிறது.

    மாநில தலைவர்கள்

    மாநில தலைவர்கள்

    ஆம், மாநில சுயாட்சி இல்லையென்றால், மாநில தலைவர்கள் இல்லையென்றால் இந்த கொரோனா போராட்டத்தில் எப்போதோ இந்தியா தோல்வி அடைந்து இருக்கும். இந்தியா முழுக்க கொரோனாவிற்கு எதிராக மாநில தலைவர்கள்தான் தீவிரமாக போராடி வருகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணமாக ஒடிசா, தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிராவை கூறலாம்.

    ஒடிசா நிலை

    ஒடிசா நிலை

    கொரோனாவை எதிர்கொள்ளும் மாநிலங்களில் மிக அமைதியாக அதே சமயம் மிக தீவிரமாக தயாராகி வரும் மாநிலம்தான் ஒடிசா. ஒடிசாவில் இரண்டு வாரம் முன் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது. ஆனால் இப்போதுவரை அங்கு 3 பேருக்கு மட்டும்தான் கொரோனா தாக்கியுள்ளது. அங்கு கொரோனா பரவலை மிக தீவிரமாக முதல்வர் நவீன் பட்நாயக் கட்டுப்படுத்தி வருகிறார். அதோடு ஒடிசாவில் 1,000 படுக்கைகளுடனான மருத்துவமனைகளை 15 நாட்களில் உருவாக்க அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கொரோனா தீவிரம் அடையும் முன்பே அதை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் அம்மாநில அரசு செய்துள்ளது.

    கேரளா நிலை

    கேரளா நிலை

    இன்னொரு பக்கம் கேரள மாநில அரசோ, உலகம் மொத்தத்திற்கு கொரோனாவை எப்படி எதிர்கொள்ள வேண்டும். எப்படி மக்களை தனிமைப்படுத்த வேண்டும். சோதனைகளை எப்படி வேகமாக செய்ய வேண்டும், வெளிப்படைத்தன்மை என்று பல விஷயங்கள் குறித்து பாடம் எடுத்து வருகிறது. பல நாடுகளை விட கேரளா இதில் வேகமாக செயல்பட்டு வருகிறது. கேரளாவை உலக சுகாதார மையமே இதில் தீவிரமாக பாராட்டி வருகிறது.

    மகாராஷ்டிரா எப்படி

    மகாராஷ்டிரா எப்படி

    இதில் அதிகம் பாராட்டப்பட வேண்டிய மாநிலம் மகாராஷ்டிராதான். அங்கு சிவசேனா முதல் முறை ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது. அனுபவம் இல்லாமல் ஆட்சியில் அமர்ந்த உத்தவ் தாக்கரே தற்போது இந்தியாவிற்கே ரோல் மாடல் முதல்வராக மாறியுள்ளார். மிக அமைதியாக, நேர்த்தியான திட்டமிடல் மூலம், அதிகாரத்தை பிரித்துக் கொடுத்து அங்கு உத்தவ் தாக்கரே கொரோனாவிற்கு எதிராக கலக்கி வருகிறார்.

    தமிழகம் மேற்கு வங்கம்

    தமிழகம் மேற்கு வங்கம்

    அதேபோல் பாஜக அல்லாத மாநிலங்களான தமிழகம், மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா ஆகிய நான்கு மாநில முதல்வர்களும் கொரோனாவை தீவிரமாக கட்டுப்படுத்தி வருகிறார்கள். பிரதமர் மோடி நாடு முழுக்க கட்டுப்பாட்டை விதிக்கும் முன்பே தங்கள் மாநிலங்களில் இவர்கள் கட்டுப்பாட்டை விதித்தார்கள். தமிழகம் எல்லோருக்கும் முன்னோடியாக, தன் எல்லையை முதல் மாநிலமாக மூடியது. கொரோனாவிற்கு எதிராக தமிழகம் மிக சிறப்பான பணிகளை செய்து வருகிறது.

    இந்தியா தோல்வி அடைந்து இருக்கும்

    இந்தியா தோல்வி அடைந்து இருக்கும்

    நாடு முழுக்க மாநில தலைவர்கள் எழுச்சி அடைந்துள்ளனர். இப்படி மாநில தலைவர் அதிரடியாக செயல்பட்ட காரணத்தால்தான் இந்தியாவில் கொரோனாவை கொஞ்சம் கட்டுப்படுத்த முடிகிறது. அதேபோல் ஒழுக்கமான ஊரடங்கு கடைபிடிக்கப்படவும், மாநில முதல்வர்களும், அவர்களின் கண்டிப்பான அணுகுமுறையும்தான் காரணம். மத்திய பாஜக நினைத்தது போல் அதிகாரம் டெல்லியில் மட்டும் குவிந்து இருந்தால் இது சாத்தியம் ஆகி இருக்காது. டெல்லி மட்டும்தான் முடிவு எடுக்கும் என்ற நிலை இருந்து இருந்தால் இந்தியா இதில் தோல்வி அடைந்திருக்கும்.

    மாநில அதிகாரம்

    மாநில அதிகாரம்

    தலைமை அதிகாரம் மாநிலம் முழுக்க பரவி இருக்கிறது. இதனால் மாநில கட்சிகள் சுயமாக முடிவு எடுக்க முடிகிறது. தங்களுக்கு ஏற்ற சட்டங்களை கொண்டு வர முடிகிறது. இதுதான் கொரோனா போரில் நாம் முன்னே நிற்க காரணம். ஒரே நாடு, ஒரே கொள்கை என்ற நிலை இருந்து இருந்தால்.. இந்தியா கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி இருக்கும். பிரதமர் மோடி மட்டும்தான் முடிவை எடுப்பார் என்ற நிலை இருந்தால், நினைத்து பார்க்க முடியாத பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கும்.

    சீனா - இத்தாலி - அமெரிக்கா

    சீனா - இத்தாலி - அமெரிக்கா

    சீனா, அமெரிக்கா, இத்தாலி என்று மூன்று நாடுகளிலும் சக்தி எல்லாம் ஒரே தலைவரிடம் குவிந்து இருக்கிறது. இதுதான் அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு முக்கிய காரணம். சீனா இதை இப்போதுதான் உணர்ந்து கொண்டு இருக்கிறது. இத்தாலி இன்னும் உணரவில்லை. இப்போதுதான் அதிகார பரவலை சீனா முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் இந்தியாவின் மாநில சுயாட்சி உலகம் முழுவதற்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறி உள்ளது.

    English summary
    Regional Leaders at their best in action: Coronavirus proves the reality in Indian politics.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X