டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆ.. கட்காரிதான் அடுத்த பிரதமரா... மாநில கட்சிகளை வளைக்க பாஜக பக்கா வியூகம்?

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மாநில கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காகவே நிதின் கட்காரியை பிரதமர் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் முன்னிறுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

லோக்சபா தேர்தல் முடிவுகள் வரும் 23-ந் தேதி வெளியாகின்றன. பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் புதிய ஆட்சி அமைப்பது குறித்து தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

முடிகிறது மோடி சகாப்தம்? பிரதமராகிறாரா நிதின் கட்காரி? ஆர்.எஸ்.எஸ். அவசர ஆலோசனை! முடிகிறது மோடி சகாப்தம்? பிரதமராகிறாரா நிதின் கட்காரி? ஆர்.எஸ்.எஸ். அவசர ஆலோசனை!

சந்திரபாபு மும்முரம்

சந்திரபாபு மும்முரம்

டெல்லியில் முகாமிட்டு எதிர்க்கட்சித் தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்தினார் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு. இதேபோல் பாஜக முகாமும் அடுத்த நகர்வுகளுக்கு வியூகம் வகுத்து வருகின்றன.

எக்ஸிட் போல் முடிவுகள்

எக்ஸிட் போல் முடிவுகள்

தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும் என கூறுகின்றன. ஆனால் பாஜக தலைவர்களே கூட அதிகபட்சம் 220 தொகுதிகள் தான் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்.

பிரதமராக நிதின் கட்காரி?

பிரதமராக நிதின் கட்காரி?

அப்படி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மாநில கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளையும் பாஜகவும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் தொடங்கிவிட்டன. இதன் ஒரு கட்டமாகவே பிரதமர் பதவிக்கு நிதின் கட்காரியை முன்னிறுத்துகிறது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்.

பாஜகவின் மென்மை முகம்

பாஜகவின் மென்மை முகம்

பாஜகவின் மென்மை முகமாக கருதப்படும் நிதின் கட்காரியை பிரதமராக்க திமுக போன்ற மாநில கட்சிகள் நிச்சயம் ஆதரவு தரும் என்பது அக்கட்சியின் எதிர்பார்ப்பு. இதனால்தான் இன்று நாக்பூரில் நிதின் கட்காரியை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பொதுச்செயலர் பையாஜி ஜோஷி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினாராம்.

சிக்னல் கிடைச்சிருச்சு!

English summary
Sources said that if BJP not able to secure the majority it will choose Union Minister Nitin Gadkari as the Next prime minister with the regional parties support.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X