டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எக்ஸிட் போல் எல்லாம் வேஸ்ட்.. இவர்கள்தான் கிங் மேக்கர்ஸ்.. இப்போதே வலை வீசும் பாஜக, காங்கிரஸ்!

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின் மாநில கட்சிகள்தான் கிங் மேக்கர்களாக இருக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் இப்போதே மாநில கட்சிகளுடன் தேசிய கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கி உள்ளது.

லோக்சபா தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நேற்றுதான் லோக்சபா தேர்தல் முடிந்தது.

லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எதுவும், எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக வரவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியில் இருக்கிறது. எல்லா முடிவுகளும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றே கூறியது.

காங்கிரஸ் எப்படி

காங்கிரஸ் எப்படி

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து ஆலோசிக்க தொடங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சி 21 எதிர்கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் முடிவில் இருக்கிறது. பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, நவீன் பட்நாயக், சரத் பவார் ஆகியோருடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் பேசி வருகிறது.

பாஜக இழுக்க பார்க்கிறது

பாஜக இழுக்க பார்க்கிறது

இன்னொரு பக்கம் பாஜகவும் மாநில கட்சிகளை இழுக்க பார்க்கிறது. காங்கிரஸ் பேசி வரும் 21 கட்சிகளில் 5 கட்சிகளை இழுத்தாலே ஆட்சியை பிடிக்கலாம் என்று பாஜக நினைக்கிறது. அதனால், 5 கட்சிகளை மட்டும் தனது கூட்டணிக்கு இழுத்து காங்கிரசுக்கு அதிர்ச்சி அளிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

முக்கியம்

முக்கியம்

அதேபோல் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆலோசனை நடத்த இருப்பதாக செய்திகள் வருகிறது. ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி அதிக இடங்களை வெல்ல வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வருகிறது. அதேபோல் தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி வெற்றிபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவிடம் அமித் ஷா பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள்தான்

இவர்கள்தான்

இதனால் லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின், ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரசேகர ராவ், முக தலைவர் ஸ்டாலின், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, நவீன் பட்நாயக், சரத் பவார், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ் ஆகியோர் முக்கிய முடிவெடுக்கும் சக்திகளாக உருவெடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

English summary
Regionals are the kingmakers: BJP and Congress run behind the tails of state parties even after post-poll survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X