டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"போய் குரான் படிங்க, மனுஸ்மிருதி படிங்க".. முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்ட ரெஹனா.. அடுத்து என்ன செய்வார்

ரெஹானா பாத்திமா போலீசில் சரண் அடைய முடிவு செய்துள்ளார்

Google Oneindia Tamil News

டெல்லி: "போய் அவரை குரான், மனுஸ்மிருதி படிக்க சொல்லுங்க" என்று கேரள ஹைகோர்ட் நீதிபதிகள் சொல்லிவிட்டனர்.. "இப்படியெல்லாமா எங்களுக்கு கேஸ் வரணும்? குழந்தைகளுக்கு அவர் என்ன சொல்ல நினைக்கிறார்? இதெல்லாம் மோசமான ரசனையாக இருக்கிறதே" என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும் சொல்லிவிட்டனர்.. ரெஹானா பாத்திமா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு குறித்து இவ்வாறு அதிருப்தியை சொல்லி 2 கோர்ட்டுமே அதனை டிஸ்மிசும் செய்துவிட்டதால், அநேகமாக பாத்திமா போலீசில் சரண் அடைவார் என்ற தகவல் வந்துள்ளது!
கடந்த ஜுன் 19ம் தேதி, பாத்திமா ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.. அதில் அரை நிர்வாண கோலத்தில் பாத்திமா படுத்து கொள்ள, அந்த உடம்பில் அவருடைய மகனும், மகளும் டிராயிங் வரைகிறார்கள். அதற்கு 'பாடி ஆர்ட் பாலிடிக்ஸ்' (#BodyArtPolitics) என்று ஒரு தலைப்பும் போட்டிருந்தார்.

Recommended Video

    போலீஸ் தேடும் Rehana Fathima யார்? அவர் செய்த தவறு என்ன? | Sabarimala Women

    "தன் அம்மாவின் உடலை பார்த்து வளரும் குழந்தைகள் பெண்களின் உடலை அவமதிக்காது... பெண்களின் உடலைப் பற்றிய விழிப்புணர்வை வீட்டிலிருந்தே கற்றுக் கொடுத்தால்தான் இந்த சமூகம் மாறும்.. பார்ப்பவரின் பார்வையில் ஆபாசமும் உள்ளது" என்று இதற்கு நீண்ட விளக்கமும் தந்திருந்தார்.

    எலக்ட்ரிக் வாகனங்களுக்கு கெஜ்ரிவால் அரசு சலுகை மழை.. புதிய வாகன கொள்கைக்கு பல தரப்பில் வரவேற்புஎலக்ட்ரிக் வாகனங்களுக்கு கெஜ்ரிவால் அரசு சலுகை மழை.. புதிய வாகன கொள்கைக்கு பல தரப்பில் வரவேற்பு

     வைரல்

    வைரல்

    இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பெரும் வைரலானது.. இது சம்பந்தமாக திருவல்லா போலீசில் புகார் தரப்பட்டது.. மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையமும் கையில் எடுத்து, வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த சமயத்தில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ரெஹானா பாத்திமா கேரள ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    குரான்

    குரான்

    அப்போது நீதிபதி உன்னிகிருஷ்ணன் "எல்லாத்தையும் 4 சுவற்றுக்குள்ளே அவர் வீட்டுக்குள்ளேயே இருந்திருக்கணும்.. சட்டத்தால் அதைத் தடை செய்ய முயலக்கூடாது.. மனுஸ்மிருதி, புனித குர்ஆன் இப்படி நூல்களை படிக்க பார்க்க சொல்லுங்க.. அதில் குழந்தைகளின் வாழ்வில் தாயின் பங்கு என்ன என்பது பற்றி விளக்கமா சொல்லப்பட்டிருக்கும்" என்று ஆவேசமாக கூறி அந்த ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தார். அதனால் முன்ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பாத்திமா மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    மனுதாரர்

    மனுதாரர்

    இந்த மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பிஆர் காவே, கிருஷ்ணா முராரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள், "என்ன மாதிரியான வழக்கு எங்க கிட்ட வந்திருக்கிறது? மனுதாரர் சமூகச் செயற்பாட்டாளராக இருக்காலம்... அதுக்காக இதுபோன்ற செயல்களை எல்லாம் நினைச்சு கூட பார்க்க முடியாதது. அவரின் உடலில் ஓவியம் வரைய வைப்பதன் மூலம் கற்றுக்கொடுக்க போகிறார்? இது சமூகத்தின் மிக மோசமான ரசனையாக இருக்கிறதே" என்று சொல்லி மனுவை தள்ளுபடி செய்தனர்.

     கைது?

    கைது?

    இப்படி சுப்ரீம் கோர்ட்டும் முன்ஜாமீன் அளிக்க மறுத்துள்ளதால், ரெஹானாவுக்கு வேறு வழியில்லாமல் உள்ளது.. அதனால் போலீசில் சரண்டர் ஆக முடிவு செய்துள்ளார்.. இன்று அவர் டெல்லியில் இருந்து கொச்சி வர உள்ளார்.. அநேகமாக திங்கட்கிழமை போலீசில் சரண் அடைய முடிவு செய்துள்ளதாக ரெஹானாவின் கணவர் மனோஜ் தெரிவித்துள்ளார்.

    English summary
    rehana fathima is expected to surrender to the kochi police soon
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X