டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமருக்கு ஒரு நீதி.. எங்களுக்கு ஒரு நீதியா.? வாரணாசி தேர்தலை ஒத்தி வைங்க.. விவசாயிகள் புகார் மனு

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமா் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் விவசாயிகள் மனு அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் மனு அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் நிர்வாகிகளில் ஒருவரான தெய்வசிகாமணி, வாரணாசியில் தேர்தல் அதிகாரிகள் விதிமுறைகளை மீறி ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக புகார் கூறியுள்ளார்

Rejection of nomination papers with out reasons..Farmers demand to postpone Varanasi election

வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற விவசாயிகள் மீது வாரணாசி காவல்துறையினர் அடக்குமுறையை கையாண்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார். வாரணாசியில் போட்டியிட தமிழக விவசாயிகள் 40 பேரும் தெலுங்கானாவிலிருந்து 60-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் ஒன்றாக சென்றதாக கூறினார்

டெபாசிட் தொகையை கட்ட தேவையான செல்லானை கொடுக்காமல், வேண்டுமென்றே 3 மணி நேரம் இழுத்தடித்தனர். ஆகவே எங்களால் சரியாக மனு தாக்கல் செய்ய முடியவில்லை

சரியாக மனு தாக்கல் செய்திருந்த 35 பேரின் மனுவும் நிராரிக்கப்பட்டுள்ளது. காரணமின்றி வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து தான் வாரணாசியில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என கோருகிறோம்.

பிரதமர் என்பதால் அவருக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி நாட்டில் இருக்க கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளதாக விவசாயிகள் கூறினர்.

English summary
The farmers' petition in the Chief Electoral Commission of the Delhi to postpone election in the Varanasi constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X