டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வந்து விட்டது ஜியோ ஃபைபர்.. அதிரடி ஆபர்களுடன்.. நாளை முதல்.. ஆடி தள்ளுபடியை மிஞ்சும் சலுகைகள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Reliance Jio Fiber net is launched tomorrow commercially

    டெல்லி: கேபிள் டிவி, லேண்ட்லைன் சேவை, இன்டர்நெட் சேவையுடன் கூடிய ஜியோ ஃபைபர் நெட் சேவை நாடு முழுவதும் நாளை முதல் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஃபைபர் நெட் அறிமுகப்படுத்தப்படுகிறது.

    அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பதை போல இண்டர்நெட் இன்றி நாடே இயங்காது என்ற அளவுக்கு கிராமப்புறம், நகர்ப்புறம் என அனைத்து இடங்களிலும் இண்டர்நெட் புகுந்துள்ளது.

    அந்த வகையில் பிஎஸ்என்எல், ஏர்டெல், ஹாத்வே, டிகோனா, வோடபோன் உள்ளிட்ட இண்டர்நெட் சர்வீஸ் புரொவைடர்கள் உள்ளனர். இண்டர்நெட் பேக்கேஜ்கள் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும். அதற்கேற்ப தொகையும் மாறுபடும்.

    காஷ்மீரிலா கை வைக்கிறீர்கள்.. இனி எங்களை பற்றி பேச இந்தியாவுக்கு தார்மீக உரிமை இல்லை: இலங்கை தடாலடிகாஷ்மீரிலா கை வைக்கிறீர்கள்.. இனி எங்களை பற்றி பேச இந்தியாவுக்கு தார்மீக உரிமை இல்லை: இலங்கை தடாலடி

    வாஷ் அவுட்

    வாஷ் அவுட்

    இந்த நிலையில் செல்போன் சேவைகளை வாஷ் அவுட் செய்யும் விதத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் இலவச வாய்ஸ் கால், நெட் என செல்போனில் சேவைகளை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாரி வழங்கியது. பின்னர் வாடிக்கையாளர்களை கவர்ந்தவுடன் குறைந்த கட்டணத்தில் ரீசார்ஜ் செய்து கொண்டு இந்த சேவைகளை பயன்படுத்தும்படி கமர்சியலானது. இதனால் செல்போன் வாங்குபவர்கள் அதிகரித்தனர்.

    இலவசம்

    இலவசம்

    தற்போது ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் நெட் என்ற பெயரை ஜியோ ஃபைபர் என்ற பெயரில் பல்வேறு சலுகை மழைகளுடன் இண்டர்நெட் சேவை, டிவி, கேபிள், லேண்ட்லைன் சேவைகளை கொடுக்க வருகிறது. இதில் இண்டர்நெட் சேவை மட்டும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நகரங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இலவசம்

    இலவசம்

    அன்லிமிடெட் ஜிபியை இலவசமாகவே வழங்கி வந்த ரிலையன்ஸ் நாளை முதல் தங்கள் இலவச சேவையை வணிகமயமாக்குகிறது. இதில் போன் டிவைஸ் இருந்தால் போதும் லேண்ட் லைன் இணைப்பு கொடுக்கப்படுகிறது. பின்னர் செட் டாப் பாக்ஸுடன் கூடிய கேபிள் இணைப்பு, இலவச 4 கே டிவி உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும்.

    சாத்தியம்

    சாத்தியம்

    இந்த ஜியோ ஃபைபர் நெட்டை பெற அவர்களது இணையதளங்களில் சென்று படிவங்களை நிரப்ப வேண்டும். மேலும் ஆங்காங்கே நோட்டீஸ்களும் வழங்கப்படுகின்றன. அதில் குறிப்பிட்ட பகுதியின் பகுதி மேலாளரின் எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த எண்ணிற்கு போன் செய்து நீங்கள் வசிக்கும் இடத்தில் பைபர் நெட் சாத்தியமா என கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

    700-க்கு நெட் சேவை

    700-க்கு நெட் சேவை

    இண்டர்நெட், கேபிள், லேண்ட்லைன் ஆகியவை குறைந்தபட்சம் 700 முதல் ரூ 10000 வரை பிளான்களுக்கு ஏற்ப கிடைக்கப்பெறும். இந்த சேவைகளை ஆண்டுக்கும், மாதத்துக்கும் பெற்று கொள்ளலாம். 100 Mbps வேகம் கொண்ட இணையதள சேவை ரூ 700க்கு கிடைக்கப்பெறும். இந்த சேவைகள் தற்போது வரை டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், ஹைதராபாத், சூரத், வதோதரா, சென்னை, நொய்டா, காஸியாபாத், புவனேசுவரம், வாரணாசி, அலகாபாத், பெங்களூர், லக்னோ, பஞ்சாப், போர்ட் பிளேர், கயை, பாட்னா, மீரட், ஆக்ரா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் கிடைக்கப்பெறுகிறது.

    பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ

    பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ

    லேண்ட்லைன் மூலம் இலவசமாக உள்ளூர் மற்றும் வெளியூர் தொலைபேசி இணைப்புகளை தொடர்பு கொள்ளலாம். பிரீமியம் ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்கள் திரைப்படங்கள் வெளியாகும் நாளில் முதல் நாள் முதல் ஷோ பார்க்கும் வாய்ப்பையும் ஜியோ வழங்குகிறது.

    English summary
    Reliance Jio Fiber net is launched tomorrow commercially with Set top box, free 4K Tv, Landline service etc.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X