டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜூம் மீட் ஆப்பிற்கு போட்டியாக களத்தில் இறங்கி இருக்கும் ஜியோ மீட் ஆப்!!

Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவின் ஜூம் ஆப்பை ஓரம் கட்டும் வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ மீட் என்ற புதிய ஆப்பை நேற்று இரவு அதிரடியாக அறிமுகம் செய்துள்ளது. ஜியோ மீட் வீடியோ கான்பரன்சிங்கில் ஒரே சமயத்தில் 100 பேர் கலந்து கொள்ளலாம்.

ஜியோ மீட் ஆப் வழியாக தொடர்ந்து 24 மணி நேரமும் எந்தவித இடர்பாடுகளும் இல்லாமல் கூட்டத்தை நடத்தலாம் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. எந்தவித செல்போன்களிலும் இந்த ஆப்பை பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Reliance Jio launches JioMeet

இந்த ஆப்பை வியாழக்கிழமை இரவு சிறிய அளவிலான தொடர்புகளுடன் ஜியோ அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த ஜியோ ஆப் கூகுள் பிளே மற்றும் கூகுள் ஸ்டோரில் கிடைக்கிறது. கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் உள்பட சில பிரபல வீடியோ கான்பரன்சிங் டூல்களுக்கு இந்த ஆப் போட்டியாக களத்தில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஜியோ மீட் ஆப்பை ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ், மாக்ஓஎஸ் ஆகியவற்றிலும் பயன்படுத்தலாம். வெப் வழியிலான ஆப் ஸ்டோர்களிலும் பயன்படுத்தலாம். ஜியோவின் அதிகாரபூர்வ இணையதளங்களில் இருந்தும் ஜியோ மீட் ஆப்பை பதிவிறக்கம் செய்யலாம்.

வாடிக்கையாளர்கள் தங்களது தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் ஐடியை ஜியோமீட் உடன் பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் இணைப்பு கிடைக்கும். ஹெச்டி தரத்துடன், இலவசமாக இந்த இணைப்பை பெறலாம். கணக்கில்லாத வகையில் இந்த ஆப் மூலம் மீட்டிங் நடத்திக் கொள்ளலாம். இதற்கு என்று தனியாக பாஸ்வேர்ட் வைத்துக் கொள்ளலாம்.

கவலைகளா?.. தூக்கமின்மையா?.. இந்த ஆசனத்தை செய்ங்க!.. அப்பறம் பாருங்க.. சொல்கிறார் டாக்டர் தீபாகவலைகளா?.. தூக்கமின்மையா?.. இந்த ஆசனத்தை செய்ங்க!.. அப்பறம் பாருங்க.. சொல்கிறார் டாக்டர் தீபா

ஜியோ மீட்டிங்கில் கலந்து கொள்ள இருப்பவர்கள் தங்களது மீட்டிங் ஐடி மற்றும் பாஸ்வேர்டை தங்களது எதாவது ஒரு டிவைஸ் மூலம் பகிர வேண்டும்.

அதாவது ஜியோ மீட்டிங்கில் இருக்கும்போதே மல்டி டிவைஸ் முறையில் வேறு சாதனங்களுக்கும் தடையின்றி மாறலாம். Safe Driving Mode, Screen Share வசதியும் வழங்கப்பட்டுள்ளன.

தனியாக எந்த ஆப்பும் பதிவிறக்கம் செய்யாமல், எந்த டிவைசில் இருந்தும் ஜியோ மீட் அழைப்பு லிங்கை பிரவ்சரில் அனுப்ப WEBRTC உதவி செய்கிறது. இதன் மூலம் மீட்டிங்கில் வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ளலாம். ரிலையன்ஸ் ஜியோ மீட் தகவல்கள் என்கிரிப் ஆக பதிவாகி விடும். பாஸ்வேர்டும் பாதுகாக்கப்படும்.

நேற்று இரவுதான் ஜியோ மீட் ஆப்பு பயன்பாட்டிற்கு வந்தாலும், கடந்த இரண்டு மாதங்களாகவே சோதித்து பார்க்கப்பட்டது என்று கூறப்படுகிறது. ஜூம் ஆப் மூலம் இந்தியர்களின் தகவல்களை சீனா திருடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற காரணத்தால், ஜூம் பயன்பாட்டை நிறுவனங்கள் குறைக்க வேண்டும் என்று சமீபத்தில் மத்திய அரசு மறைமுகமாக கேட்டுக் கொண்டு இருந்தது.

சீனாவின் 59 செயலிகளை இந்தியா ஏற்கனவே ரத்து செய்து இருக்கும் நிலையில், தற்போது ஜூம் ஆப்புக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

English summary
Reliance launches Video conferencing app rival to Zoom Meet; check features
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X