டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

20% பங்குகளை சவுதி நிறுவனத்திற்கு விற்ற அம்பானி.. ரிலையன்ஸின் அதிர்ச்சி முடிவு.. என்ன காரணம்?

ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனம் தனது எண்ணெய் வர்த்தக துறையில் உள்ள 20% பங்குகளை சவுதி அரேபியா நிறுவனம் ஒன்றுக்கு விற்று இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Reliance to sell shares | 20% பங்குகளை சவுதி நிறுவனத்திற்கு விற்ற அம்பானி- வீடியோ

    டெல்லி: ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனம் தனது எண்ணெய் வர்த்தக துறையில் உள்ள 20% பங்குகளை சவுதி அரேபியா நிறுவனம் ஒன்றுக்கு விற்று இருக்கிறது.

    ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது அடுத்தகட்ட அதிரடிக்கு தயாராகி உள்ளது. ஜியோ மூலம் இந்தியாவில் புதிய தொலைத்தொடர்பு புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் தற்போது மற்ற துறைகளில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

    எல்லோரும் எதிர்பார்த்த ஜியோஃபைபர் அறிவிப்பை நேற்று ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டது. தொலைத்தொடர்பு சாதனங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டு வர ஜியோஃபைபரை ரிலையன்ஸ் அறிமுகம் செய்தது.

    ரிலையன்ஸ் நிறுவனம்

    ரிலையன்ஸ் நிறுவனம்

    அதேபோல் ரிலையன்ஸ் நிறுவனம் தனது எண்ணெய் வர்த்தகம் மற்றும் எரிபொருள் சார்ந்த விற்பனை குறித்தும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் மிக முக்கியமானதுதான், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீடு.

    சவுதி அராம்கோ

    சவுதி அராம்கோ

    அதன்படி ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனம் தனது எண்ணெய் வர்த்தக துறையில் உள்ள 20% பங்குகளை சவுதி அரேபியாவை சேர்ந்த சவுதி அராம்கோ நிறுவனத்திற்கு விற்று இருக்கிறது. ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனத்திற்கு இருக்கும் கடனையும் சேர்த்து இதன் மதிப்பு 5.3 லட்சம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

    சவுதி அராம்கோ யார்

    சவுதி அராம்கோ யார்

    ரிலையன்ஸ் வரலாற்றில் இதற்கு முன் இவ்வளவு பெரியதாக பங்குகளை விற்பனை செய்தது கிடையாது. அந்த நிறுவனத்தின் அதிகபட்ச வெளிநாட்டு பங்கு விற்பனை இதுதான். அதேபோல் இந்தியாவிலேயே மிகப்பெரிய வெளிநாட்டு பங்கு விற்பனை இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    எப்படி

    எப்படி

    சவுதி அராம்கோ உலகின் முன்னணி எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று. இந்த ஒப்பந்தத்தின்படி சவுதி அராம்கோ நிறுவனம் தினமும் 5,00,000 கச்சா எண்ணெய் பேரல்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகின் முன்னணி கச்சா எண்ணெய் நிறுவனமும், பெட்ரோலிய விற்பனை நிறுவனமும் இதன் மூலம் கைகோர்த்துள்ளது.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஜியோ அறிவிப்பை நிறைய கடன்களுடன்தான் தொடங்கியது. இந்த கடன்களை அடைக்கவே ரிலையன்ஸ் தற்போது பங்குகளை விற்று இருப்பதாக கூறப்படுகிறது. ரிலையன்ஸ் பங்குகள் விற்பனையில் கடன்களும் சேர்த்து அடக்கமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Reliance to sell a 20% stake in its oil to chemicals business to Saudi Aramco in Saudi Arabia.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X