டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குட்நியூஸ்... கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்குப் பயன்படும்... ரெம்டெசிவர் விலை ரூ 2,700 வரை குறைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, ரெம்டெசிவர் மருந்தின் விலையை அம்மருந்தை உற்பத்தி செய்யும் ஏழு நிறுவனங்களும் குறைத்துள்ளன.

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நாட்டில் தினசரி வைரஸ் பரவல் இரண்டு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனாவால் தீவிரமாகப் பாதிக்கப்படுபவர்களுக்குச் சிகிச்சை அளிக்க ரெம்டெசிவர் என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், தற்போது இந்த மருந்தின் தேவை அதிகரித்துள்ளதால் கள்ளச் சந்தையில் இது அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா அலை.. தினம் தினம் புது உச்சம் தொடும் பெங்களூர்.. ஹோட்டல்களுடன் ஒப்பந்தம் போட்ட மருத்துவமனைகள்கொரோனா அலை.. தினம் தினம் புது உச்சம் தொடும் பெங்களூர்.. ஹோட்டல்களுடன் ஒப்பந்தம் போட்ட மருத்துவமனைகள்

குறைக்க வேண்டும்

குறைக்க வேண்டும்

ரெம்டெசிவர் உற்பத்தியை அதிகரிப்பது குறித்துக் கடந்த சில நாட்களுக்கு முன் மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் ரெம்டெசிவர் விலையை ரூ. 3500க்குள் இருக்குமாறு குறைக்க வேண்டும் என்றும் அரசு கோரிக்கை விடுத்திருந்தது. மேலும், உற்பத்தியை அதிகப்படுத்தும் வகையில் புதிய நிறுவனங்களுக்கு ரெம்டெசிவர் உற்பத்தி தொடங்க அனுமதி விரைவில் அளிக்கப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது.

2700 ரூபாய் வரை குறைப்பு

2700 ரூபாய் வரை குறைப்பு

இதன் மூலம் கூடுதலாக 80 லட்சம் ரெம்டெசிவர் மருந்தை உற்பத்தி செய்ய முடியும் என்றும் அரசு தெரிவித்திருந்தது. இந்தியாவில் இந்த ரெம்டெசிவர் மருந்தை ஏழு நிறுவனங்கள் வெவ்வேறு பெயர்களில் தயாரித்து வந்தன. இந்நிலையில் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, ஏழு நிறுவனங்களும் தற்போது ரெம்டெசிவர் விலையைக் குறைத்துள்ளன. ஆயிரம் ரூபாய் முதல் 2,700 ரூபாய் வரை ரெம்டெசிவர் விலை குறைக்கப்பட்டுள்ளது.

விலை குறைப்பு

விலை குறைப்பு

காடிலா ஹெல்த்கேரின் ரெம்டாக்கின் ரெம்டெசிவர் விலை ரூ. 2800இல் இருந்து 899 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. சிஞ்சின் இன்டர்நேஷனல் தனது ரெம்டெசிவர் விலையை ரூ. 3,950இல் இருந்து ரூ.2,450ஆக குறைத்துள்ளது. டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் ரூ 5400இல் இருந்து தனது ரெம்டெசிவர் விலையை ரூ 2,700ஆக குறைத்துள்ளது.

ரெம்டெசிவர் புதிய விலை

ரெம்டெசிவர் புதிய விலை

அதேபோல சிப்லா நிறுவனம் ரூ 4,000இல் இருந்து ரூ3,000க்கும் மைலன் பார்மாசியூட்டிகல் 4800 ரூபாயிலிருந்து 3400 ரூபாய்க்கும் தங்கள் ரெம்டெசிவர் விலையைக் குறைத்துள்ளன. மேலும், ஜுபிலண்ட் ஜெனரிக்ஸ் ரூ. 4700இல் இருந்து ரூ.3400-க்கும், ஹெடெரோ ஹெல்த்கேர் ரெம்டெசிவர் விலை 5400 ரூபாயிலிருந்து 3490 ரூபாயாக்கும் குறைக்கப்பட்டுள்ளது.

English summary
Price of Corona drug, Remdesivir slashed after govt intervention.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X