டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவுக்கு ரெம்டிசிவியர், தோசிலிசுனாப் மருந்துகள் பாதுகாப்பானது இல்லை: ஐசிஎம்ஆர்!!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவுக்கு ரெம்டிசிவியர், தோசிலிசுனாப் ஆகிய இரண்டு மருந்துகள் நல்லது செய்வதை விட அதிக கெடுதல்களை ஏற்படுத்தும் என்று மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் மற்றும் எய்ம்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Recommended Video

    Black market-ல் Remdesivir | COVID drug Remdesivir black market EXPOSED

    கொரோனா நோயை குணப்படுத்த , கட்டுப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் ரெம்டிசிவியர், தோசிலிசுனாப் ஆகிய மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    Remdesivir, Tocilizumab on Covid patients can cause harm says ICMR and AIIMS

    இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மாநில சுகாதார அதிகாரிகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் மற்றும் எய்ம்ஸ் காணொளி காட்சி மூலம் இந்த மருந்துகளின் பயன்பாடு மற்றும் கொரோனா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அந்தக் கூட்டத்தில், கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவதற்கு ஆக்சிஜன், வென்டிலேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்கள் கொண்டுதான் குணப்படுத்த வேண்டும். தேவையில்லாமல் கண்மூடித்தனமாக கொரோனாவை குணப்படுத்த ரெம்டிசிவியர், தோசிலிசுனாப் ஆகிய மருந்துகளை பயன்படுத்தக் கூடாது. இந்த மருந்துகள் நல்லதை செய்வதைவிட கெட்டதுதான் அதிகமாக செய்யும். இந்த மருந்துகள் கிட்னி, கல்லீரல் பாதிப்புகள் உண்டாக்கும்.

    கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் தங்கும் காலத்தை ரெம்டிசிவியர் குறைக்கும். இந்த மருந்தை மிதமாக மற்றும் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது. ஆனாலும் இந்த மருந்து சாப்பிடுவதால், கொரோனா நோயால் இறப்பவர்களின் சதவீதம் குறையவில்லை. இதேபோல்தான், தோசிலிசுனாப் மருந்தும். இந்த இரண்டு மருந்துகளும் அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

    கொரோனா பீதியால் சாதாரண நோயாளிகளுக்கும் பெரிய பாதிப்பு.. தொடவே அச்சப்படும் டாக்டர்கள்.. பரிதாபம்தான் கொரோனா பீதியால் சாதாரண நோயாளிகளுக்கும் பெரிய பாதிப்பு.. தொடவே அச்சப்படும் டாக்டர்கள்.. பரிதாபம்தான்

    பரவலாக இந்த மருந்துகளை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். இந்த மருந்துகள் நோய் எதிர்ப்பு எதிர்வினைகளை ஏற்படுத்தும். ஆக்சிஜன் தெரபி மற்றும் ஸ்டெராய்ட்ஸ் ஆகியவற்றை தற்போது கிடைக்கும் உயர்தர சப்போர்டிவ் உபகரணங்களுடன் பயன்படுத்த வேண்டும்.

    தொற்று வீரியம் அதிகமாக இருப்பவர்களுக்கு ஆக்சிஜன், வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. லேசான பாதிப்பு இருப்பவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் பரிந்துரை செய்யப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளனர்.

    English summary
    Remdesivir, Tocilizumab on Covid patients can cause harm says ICMR and AIIMS
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X