டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆசிய நாடுகளில் வேகமெடுக்கும் கொரோனா வைரஸ்.. உலக நாடுகளில் கடும் பாதிப்பை சந்தித்த இந்தியா

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதால் அந்த தொற்று நோயின் தீவிரம் ஆசிய நாடுகளில் வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,01,328 ஆக உள்ளது. 3123 பேர் பலியாகிவிட்டனர். உலக நாடுகளில் கொரோனா அதிகம் பாதித்துள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகிவிட்டது. கடந்த வாரத்தில் இருந்து 28 சதவீதம் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Report says that Coronavirus cases escalating very fast in Asia

பாகிஸ்தானில் 42,125 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 903 பேர் பலியாகிவிட்டனர். கடந்த வாரத்திலிருந்து இங்கு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 19 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இந்திய பொது சுகாதாரத் துறையின் கூடுதல் பேராசிரியர் ராஜ்மோகன் பாண்டா கூறுகையில் கொரோனா எதிர்ப்பு சவால்கள் பெரிய அளவில் இருக்கின்றன. இரு மடங்கு யுக்திகளை கையாண்டால் மட்டுமே நோய் பாதிப்பை குறைக்க முடியும் என்றார்.

அதிமுகவில் அதிரடி மாற்றம்- ஊராட்சி செயலர் பொறுப்புகள் ரத்து- ஐடி விங் 4 மண்டலங்களாகப் பிரிப்பு!அதிமுகவில் அதிரடி மாற்றம்- ஊராட்சி செயலர் பொறுப்புகள் ரத்து- ஐடி விங் 4 மண்டலங்களாகப் பிரிப்பு!

நிறுவனங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டாலும் அவை சில கஷ்டங்களை சந்தித்து வருகின்றன. ஏனெனில் பயண தடைகள், விதிகள், ஊழியர்கள் தட்டுப்பாடு ஆகியவற்றால் கடினமான சூழல் தொழில் துறைக்கு ஏற்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நகரங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் பொருளாதாரத்தில் முக்கிய பிரச்சினைகள் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

English summary
India's coronavirus crosses one lakh and the pandemic escalating very fast in Asia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X