டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெட்ரோல் விலையேற்றம்.. இரண்டில் ஒரு குடும்பத்திற்கு மிக மோசமான பாதிப்பு.. ஆய்வில் ஷாக் தகவல்

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை பொதுமக்களுக்கு கடும் சுமையாக மாறியுள்ளதாகவும் இதனால் இரண்டில் ஒரு குடும்பத்தினர் தங்கள் செலவுகளை வேறுவழியின்றி குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை சதமடித்துள்ளது.

டீசல் விலையேற்றம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ 98.86-க்கும் டீசல் ரூ 93.46-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 விண்ணை முட்டும் பெட்ரோல் விலை.. மாநில அரசுகளே காரணம்.. புது விளக்கம் தரும் பெட்ரோலிய துறை அமைச்சர் விண்ணை முட்டும் பெட்ரோல் விலை.. மாநில அரசுகளே காரணம்.. புது விளக்கம் தரும் பெட்ரோலிய துறை அமைச்சர்

லோக்கல் சர்கில்ஸ் ஆய்வு

லோக்கல் சர்கில்ஸ் ஆய்வு

மேலும், மத்திய, மாநில அரசுகளின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதால்,குறைந்தது அடுத்த சில ஆண்டுகளுக்கு வரி குறைப்பிற்கும் வாய்ப்பு இல்லை என்பதே வல்லுநர்களின் கருத்து. எனவே, இன்னும் சில ஆண்டுகளுக்கு எரிபொருட்கள் விலையில் இதே நிலை தான் நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1.5 ஆண்டுகளில் இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ 31 வரையும். டீசல் விலை ரூ 25 வரையும் உயர்ந்துள்ளதாகவும் லோக்கல் சர்கில்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

50% குடும்பங்கள்

50% குடும்பங்கள்

இந்தியாவில் இப்போது 50 சதவீதத்திற்கும் அதிகமான பொதுமக்கள் எரிபொருள் விலையேற்றம் காரணமாக அத்தியாவசிய மற்றும் இதர பொருட்களின் செலவினங்களைக் குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது எரிபொருள் விலை உயர்வு காரணமாக 51% செலவுகளையும் 21 சதவீதம் பேர் அத்தியாவசிய பொருட்களுக்கான செலவையும் குறைத்துள்ளனர். மேலும், 14 சதவீதம் பேரின் சேமிப்பு எரிபொருள் விலையேற்றம் காரணமாக குறைந்துவிட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படும் பொருட்களில் பெட்ரோல் மற்றும் டீசலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோல், டீசல் மற்றும் விமான டர்பைன் எரிபொருள் ஆகியவை ஜிஎஸ்டி வரம்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. எனவே, இவை மீது மத்திய கலால், செஸ் மற்றும் VAT என பல்வேறு விதமான வரிகள் விதிக்கப்படுகின்றன. இப்போதைய சூழலில் மத்திய அரசும் சரி மாநில அரசுகளும் சரி பெட்ரோல், டீசல் பொருட்கள் மீதான வரியைக் குறைக்கும் எண்ணத்தில் இல்லை. இதனால் வரும் காலங்களில் எரிபொருள் விலை குறைவதற்கான சாத்தியக்கூறு குறைவாகவே உள்ளது.

ஜிஎஸ்டி வரம்பு

ஜிஎஸ்டி வரம்பு

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வருவதன் மூலம் அவற்றின் விலையைப் பெருவாரியாகக் குறைக்க முடியும். இது தொடர்பான ஆலோசனைகளும் தற்போது தொடங்கிவிட்டன. ஆனால் இப்போது கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாநில அரசுகளின் வரி வருவாய் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான மாநில அரசுகள் எரிபொருட்களை ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரத் தயாராக இல்லை.

1.5 ஆண்டுகள்

1.5 ஆண்டுகள்

மேலும், மத்திய, மாநில அரசுகளின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதால்,குறைந்தது அடுத்த சில ஆண்டுகளுக்கு வரி குறைப்பிற்கும் வாய்ப்பு இல்லை என்பதே வல்லுநர்களின் கருத்து. எனவே, இன்னும் சில ஆண்டுகளுக்கு எரிபொருட்கள் விலையில் இதே நிலை தான் நீட்டிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1.5 ஆண்டுகளில் இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ 31 வரையும். டீசல் விலை ரூ 25 வரையும் உயர்ந்துள்ளதாகவும் லோக்கல் சர்கில்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
Impact of Raise in petrol, diesel in society. rising fuel prices in the country have become a burden for citizens and one in two households.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X