டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Breaking News: பிரமாண்ட சாகச நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது குடியரசு தின விழா

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் 70வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த நாளைத்தான் குடியரசு தினமாக கொண்டாடி மகிழ்கிறோம்.

குடியரசு தின கொண்டாட்டத்தின் மகுடம், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின ஊர்வலமாகும். விஜய் சவுக் பகுதியில் தொடங்கி, செங்கோட்டை மைதானம் நோக்கி ராஜ்பாத், இந்தியா கேட், திலக் மார்க் வழியாக இந்த அணிவகுப்பு நடைபெறும்.

குடியரசு தின கொண்டாட்டங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்:

Republic Day 2019 parade, flag hoisting live updates

Newest First Oldest First
11:39 AM, 26 Jan

கண்கவர் நிகழ்ச்சிகளுடன் டெல்லியில் நிறைவடைந்தது குடியரசு தின விழா

ராஜபாதையிலிருந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விடை பெற்றார்

11:28 AM, 26 Jan

ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளை தொடர்ந்து விமான சாகசம் ஆரம்பம்
11:16 AM, 26 Jan

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்- விஜயகாந்த்

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வீடியோவில் வாழ்த்து

லஞ்சம் இல்லாத ஆட்சி, யாருக்கும் அஞ்சாத நீதி, நேர்மையான தேர்தலை உருவாக்குவோம்

முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம்- விஜயகாந்த்

11:10 AM, 26 Jan

ராஜ்பாத்தில், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி ஆரம்பம்

அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புக்கு பிறகு கலை நிகழ்ச்சி

10:49 AM, 26 Jan

குடியரசு தின விழாவில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி பங்கேற்பு

மதுரையில் காந்தியடிகள் விவசாயிகளை சந்தித்த நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டது

கோலாட்டம், நாதஸ்வரம் முழங்க தமிழக அலங்கார ஊர்தி சென்றது

10:45 AM, 26 Jan

பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்பு
10:29 AM, 26 Jan

இந்திய ராணுவத்தின் சிறப்புகளை விளக்கும் ஊர்திகள் ஊர்வலத்தில் இடம் பெற்றுள்ளன
10:16 AM, 26 Jan

இந்திய ராணுவ பலத்தை பறைசாற்றும் தளவாடங்கள் ஊர்வலத்தில் பங்கேற்பு
10:13 AM, 26 Jan

'ராஜ்பாத்தில்' ராணுவ வீரர்கள் அணி வகுப்பு மரியாதை
10:10 AM, 26 Jan

தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட லான்ஸ் நாயக் நசீர் அகமது வாணிக்கு அசோக் சக்ரா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்
10:10 AM, 26 Jan

டெல்லி குடியரசு விழாவில் தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
10:00 AM, 26 Jan

அமர்ஜவான் ஜோதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி

குடியரசு தின விழா மேடைக்கு துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வருகை

விழாவுக்கு வருபவர்களை பிரதமர் மோடி வரவேற்கிறார்

10:00 AM, 26 Jan

விழா நிகழ்விடத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை

சிறப்பு விருந்தினரான தென் ஆப்பிரிக்க அதிபர் ரம்போசாவுடன் விழாவுக்கு ராம்நாத் கோவிந்த் வருகை

9:37 AM, 26 Jan

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குடியரசு தினவிழா நிகழ்ச்சியை சீர்குலைக்கும் முயற்சி முறியடிப்பு

பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து

9:05 AM, 26 Jan

டெல்லியில் காலை 9.50 மணிக்கு குடியரசு தின விழா அணிவகுப்பு

ராஜபாதையில் காலை 9.50 மணிக்கு குடியரசு தின விழா நடைபெறுகிறது

9:02 AM, 26 Jan

புதுச்சேரியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார் ஆளுநர் கிரண்பேடி

8:58 AM, 26 Jan

தலைநகர் டெல்லியில் 70வது குடியரசு தினவிழா உற்சாக கொண்டாட்டம்

டெல்லி குடியரசு தின விழாவில் தென்ஆப்ரிக்கா அதிபர் சிரில் ரமபோசா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

அனைத்து மாநில தலைநகரங்களிலும் தேசிய கொடியேற்றி ஆளுநர்கள் மரியாதை

8:28 AM, 26 Jan

குடியரசு தின விழாவில் 3 பேருக்கு அண்ணா வீரப் பதக்கம் வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சிறுவன் சூரியக்குமார், போடி ரஞ்சித் குமார், தஞ்சாவூர் ஸ்ரீதர் ஆகியோருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது

குரங்கணி தீவிபத்தின்போது 8 உயிர்களைக் காப்பாற்றியவர் ரஞ்சித் குமார்

சென்னையில் நகைத் திருடனைத் துரத்திப் பிடித்து சாதனை படைத்த சிறுவன் சூரியக்குமார்

தஞ்சை மாவட்டம் வெள்ளங்கி ஆற்றில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 6 பேரைக் காப்பாற்றியவர் ஸ்ரீதர்

8:26 AM, 26 Jan

சென்னையில் குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம்

விழா மேடையில் ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை குடியரசு தின விழாவில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் தொடக்கம்

குடியரசு தின விழாவில் சங்கே முழங்கு என்ற பாடலுக்கு பள்ளி மாணவிகள் நடனம்

8:03 AM, 26 Jan

சென்னையில் குடியரசு விழா.. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேற்றினார்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்பு

குடியரசுதின விழா அணிவகுப்பு மரியாதையையும் ஆளுநர் ஏற்றார்

5:49 AM, 26 Jan

இந்திய ராணுவத்தின் பெண்களின் பங்களிப்பு தொடர்பான அலங்கார ஊர்தி இந்த வருடத்தின் முக்கியமான ஈர்ப்பாக இருக்கும்
5:48 AM, 26 Jan

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் காலை 7 மணிக்கு தேசியக் கொடியேற்றியதும் விழா நிகழ்வுகள் முறைப்படி துவங்கும்
5:48 AM, 26 Jan

குடியரசு தின நிகழ்ச்சிகள் தூர்தர்ஷன் டிவி சேனலில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
5:48 AM, 26 Jan

பல்வேறு மாநிலங்கள், அரசு துறைகளின் 22 அலங்கார ஊர்திகள், அணி வகுப்பில் இடம் பெறுகின்றன
5:48 AM, 26 Jan

குடியரசு தின விழாவில் சிறந்து விருந்தினராக, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா பங்கேற்கிறார்

English summary
Republic Day 2019 parade, flag hoisting live streaming timings is here. You can find live updates here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X