டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியரசுத் தினம் LIVE: தப்பாட்டம் உள்பட கிராமிய கலை நடனத்துடன் கம்பீரமாக வந்த தமிழக அய்யனார்

நாடு முழுக்க இந்தியாவின் 71வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுக்க இந்தியாவின் 71வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த நாளைத்தான் குடியரசு தினமாக கொண்டாடி மகிழ்கிறோம்.

குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.இன்று காலை டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றுவார். டெல்லியில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையிலும், பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும்.

செங்கோட்டையில் கொடி ஏற்றும் பிரதமர் மோடி மக்கள் முன்னிலையில் முக்கியமான உரை நிகழ்த்துவார். நாடு முழுக்க மாநில முதல்வர்கள் சட்டமன்றங்களில் கொடி ஏற்றுவார்கள். இந்திய குடியரசுத் தினம் குறித்து சுவாரசியமான நொடிக்கு நொடி செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!

Newest First Oldest First
11:04 AM, 26 Jan

22 மாநிலங்களின் வாகனங்கள் அணிவகுப்பில் வந்தன
11:03 AM, 26 Jan

டெல்லி விழாவில் தமிழக அய்யனார் வந்த காட்சி
10:44 AM, 26 Jan

ராஜஸ்தான், தெலுங்கானா மாநில வாகனங்கள் அணிவகுப்பில் வந்தது. அஸ்ஸாம், இமாச்சல பிரதேச வாகனங்கள் அணிவகுப்பில் வந்தன. மாநிலங்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் ஊர்திகள் அணிவகுப்பு.
10:43 AM, 26 Jan

காவல் தெய்வம் அய்யனார் சிலையுடன் தமிழக வாகன அணிவகுப்பு. தமிழகத்தின் பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் வந்தது.
10:42 AM, 26 Jan

ஆகாஷ் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம் பெற்றுள்ளது
10:41 AM, 26 Jan

எல்லை பாதுகாப்பு படையின் ஒட்டகப்படையின் மரியாதையை ஏற்றார் குடியரசு தலைவர். அணிவகுப்பில் சாரண படைப்பிரிவின் சிறந்த மாணவர்கள் பங்கேற்றனர். அணிவகுப்பில் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சக்தி இடம் பெற்றுள்ளது.
10:20 AM, 26 Jan

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மனைவி குரசரன் கௌருடன் பங்கேற்பு. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே விழாவில் பங்கேற்பு. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, காங். தலைவர் சோனியா காந்தி பங்கேற்பு.
10:16 AM, 26 Jan

நாட்டின் ராணுவ தளவாடங்கள் அணிவகுப்பில் வலம் வருகின்றன. டெல்லி முப்படை வீரர்களின் அணிவிகுப்பு மரியாதை நடந்து வருகிறது. 21 குண்டுகள் முழங்க முப்படைகள் அணிவகுப்பு மரியாதை துவங்கியது.
10:04 AM, 26 Jan

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றினார்
10:04 AM, 26 Jan

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். தலைமை விருந்தினர் பிரேசில்அதிபர் ஜெயிர் பொல்சொனாரோவும் வருகை தந்தார். குடியரசுத் தலைவர் , பிரேசில் அதிபரை வரவேற்றார் குடியரசுத் துணை தலைவர் வெங்கய்ய நாயுடு.
9:52 AM, 26 Jan

குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புறப்பட்டார். பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோவும் விழாவில் பங்கேற்க காரில் புறப்பட்டுள்ளார். இன்னும் சில நிமிடங்களில் இருவரும் விழா நடைபெறும் இடத்திற்கு வர உள்ளார்கள்.
9:49 AM, 26 Jan

பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு. குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.
9:44 AM, 26 Jan

நாட்டுக்காக உயிர் நீத்த படை வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்
9:42 AM, 26 Jan

நாட்டுக்காக உயிர் நீத்த படை வீரர்களுக்கு பிரதமர் மோடிஅஞ்சலி செலுத்தினார்
9:41 AM, 26 Jan

தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி
9:41 AM, 26 Jan

பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் மரியாதை
9:41 AM, 26 Jan

வழக்கமாக டெல்லி அமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்துவார் பிரதமர்
9:41 AM, 26 Jan

முதல்முறையாக இந்த ஆண்டு தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை
9:40 AM, 26 Jan

முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட ராணுவ தளபதிகள் மரியாதை செலுத்தினர்
9:39 AM, 26 Jan

முதல்முறையாக இந்த ஆண்டு தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை
9:39 AM, 26 Jan

பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் மரியாதை. வழக்கமாக டெல்லி அமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்துவார் பிரதமர்.
9:39 AM, 26 Jan

தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி
9:11 AM, 26 Jan

தேசிய கொடியேற்றி வைத்து பின் குடியரசுத் தலைவருக்கு அணி வகுப்பு மரியாதை. முப்படைகள் சார்பில் அணிவகுப்பு மரியாதை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா உள்பட பல்வேறு தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
9:11 AM, 26 Jan

61 குதிரைப்படை வீரர்களின் அணிவிப்பு மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றி வைக்க உள்ளார்
9:10 AM, 26 Jan

ராஜபாதை முதல் செங்கோட்டை வரை 8 கிமீக்கு அணிவகுப்பு நடைபெறுகிறது
9:10 AM, 26 Jan

டெல்லியில் குடியரசு தினவிழா களைகட்டியது: பொதுமக்கள் குவிந்தனர்
8:23 AM, 26 Jan

சென்னை காமராஜர் சாலையில் நடந்த குடியரசு தின விழாவில் விருது வழங்கினார் முதல்வர் எடப்பாடி
8:21 AM, 26 Jan

வீரதீர செயலுக்கான அண்ணா விருது நாகையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ராஜாவுக்கு வழங்கப்பட்டது
8:21 AM, 26 Jan

கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது மு.சாஜ் முகமதுவுக்கு வழங்கப்பட்டது
8:21 AM, 26 Jan

காந்திடிகள் காவலர் பதக்கம் திருப்பூர் காவலர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகனுக்கு வழங்கப்பட்டது
READ MORE

Republic Day 2020 LIVE UPDATES: Delhi and other states prepare for the celebration of the Indian Constitution
English summary
Republic Day 2020: Delhi and other states prepare for the celebration of the Indian Constitution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X