Just In
இந்தியாவின் பன்முகத்தன்மை...டூடுல் வெளியிட்டு கவுரவித்த கூகுள்
டெல்லி : இந்தியாவின் 72 வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மும்பையை சேர்ந்த ஆன்கர் பன்டேகர் என்பவர் வரைந்த ஓவியத்தை டூடுலாக வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள்.
முக்கிய நாட்கள், தேசிய விழாக்கள், பண்டிகைகள், தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பிறந்தநாட்கள், சர்வதேச விளையாட்டு உள்ளிட்டவைகளை சிறப்பிக்கும் விதமாக டூடுல் வெளியிடுவது கூகுள் நிறுவத்தின் வழக்கம்.

அந்த வகையில், இந்தியாவின் பன்முகத்தன்மையை உணர்த்தும் விதமாக பல்வேறு விதமான கலாச்சாரங்களை உள்ளடக்கியதாக அந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு இதனை டூடுலாக கூகுள் வெளியிட்டுள்ளது.
இது பற்றி பன்டேக்கர் கூறுகையில், இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு மற்றும் கட்டிடகலை ஆகியனவே இந்த ஓவியத்தை என்னை வரைய தூண்டியது என்றார்.