டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த வருட குடியரசு தின கொண்டாட்டம் மொத்தமாக மாறப்போகிறது.. காரணம் கொரோனா.. ரூல்ஸ்கள் தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பரவல் காரணமாக, இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு, கடந்த காலத்தை ஒப்பிட்டால் சற்று வித்தியாசமாக இருக்கப்போகிறதாம்.

ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று, டெல்லியில் கோலாகல விழா நடைபெறும். நாட்டின் ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில் பேரணிகளும் நடத்தப்படும்.

Republic Day parade is going to be a bit different this year

பள்ளி, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படும். ஆனால், இந்த முறை நிறையவே வேறுபாடுகள் அமலுக்கு வருகின்றன.

பார்வையாளர்களின் எண்ணிக்கை 1,15,000 என்பதிலிருந்து 25,000 என்ற அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது. கலாச்சார நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளதாம்.

தகவல்கள்படி, குடியரசு தின அணிவகுப்பு செங்கோட்டையில் முடிவடையாது. "இது விஜய் சவுக்கிலிருந்து தொடங்கி நேஷனல் ஸ்டேடியத்தில் முடிவடையும்," என்று ஒரு அதிகாரி கூறினார், அணிவகுப்பின் தூரம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. முன்பு 8.2 கிமீ தூரம். இப்போது 3.3 கிமீ மட்டுமே.

புதிய நெறிமுறையின் கீழ், அனைத்து பார்வையாளர்களும் சமூக தொலைதூர விதிகளின்படி அமர்ந்திருப்பார்கள். எல்லா நேரங்களிலும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு குழுவிலும் உள்ள தனிநபர்களின் எண்ணிக்கை 144 க்கு பதிலாக 96 ஆக குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமான 12x12 வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளுக்கு பதிலாக, குழுக்களின் அளவு 12x8 என்று, மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அணிவகுப்பு நடைபெறும் அனைத்து நுழைவு இடங்களிலும் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படும்.. ஒவ்வொரு சாவடியிலும் ஒரு மருத்துவரும் ஒரு துணை மருத்துவரும் பணியில் இருப்பார்கள்.

English summary
Due to the corona spread, this year's Republic Day parade is going to be a bit different compared to the past.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X