டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மருந்து தர டிரம்ப் வேண்டுகோள் வைத்தாரா? மிரட்டல் விடுத்தாரா? டிரெண்டிங்காகும் ஹேஷ்டேக்குகள்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஏற்றுமதி செய்ய வேண்டும்... இல்லாவிட்டால் பதிலடி தருவோம் என்று அமெரிக்க அதிபர் இந்தியாவை மிரட்டியதை மறைத்து வேண்டுகோள் வைத்தது அமெரிக்கா என மூத்த பத்திரிகையாளர் ராகுல் கன்வால் பதிவிட்டது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

Recommended Video

    Trump says they need hydroxychloroquine or India will face retaliation

    ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா தங்களுக்கு வழங்காவிட்டால் பதிலடி தருவோம் என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டியிருந்தார். இது நாடு தழுவிய அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

    #request is trending in twitter along with #Trump, #hydroxychloriquine, #retaliation

    இந்த சர்ச்சை வெடித்த சில மணிநேரங்களிலேயே மத்திய அரசும் அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து அனுப்ப முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ராகுல் கன்வால் தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தார்.

    அதில், டொனால்ட் டிரம்ப்பின் வேண்டுகோளை (Request) இந்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது என பதிவிட்டிருந்தார். அவ்வளவுதான் நெட்டிசன்கள் ஒரே குரலில் பாய்ந்துவிட்டனர். என்னது டிரம்ப் Request வைத்தாரா? என எதிர்கேள்வியை பலரும் எழுப்பியுள்ளனர்.

    மேலும் உங்களது அகராதியில் Retaliation என்பதற்கு Request என்பதுதான் அர்த்தமோ எனவும் பலர் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இப்போது சமூக வலைதளங்களில் #request' #Trump, #hydroxychloriquine, #retaliation ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்காகி இருக்கின்றன.

    English summary
    A New Controversy erupted over Rahul Kanwal's Tweet on US Retaliation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X