டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜூன் 1 முதல் சிறப்பு ரயில்கள்-இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு- 200 ரயில்களின் கால அட்டவணை வெளியீடு

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் ஜூன் 1-ந் தேதி முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று வியாழக்கிழமை காலை ஆன்லைனில் தொடங்குகிறது. ஜூன் 1-ந் தேதி முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் ரயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. ஆனால் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதற்காக சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன.

Reservation for 200 trains to begin from Thursday

இதனையடுத்து லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மே 1-ந் தேதி முதல் இடம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 1600க்கும் அதிகமான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர்.

பெங்களூரு மர்ம சப்தத்துக்கு கிடைத்தது விடை! போர் விமானம் சூப்பர் சோனிக் வேகத்தில் சென்றதுதான் காரணம்பெங்களூரு மர்ம சப்தத்துக்கு கிடைத்தது விடை! போர் விமானம் சூப்பர் சோனிக் வேகத்தில் சென்றதுதான் காரணம்

இந்நிலையில் ஜூன் 1-ந் தேதி முதல் 200 பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இதனிடையே இந்த 200 ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று வியாழக்கிழமை காலை தொடங்குகிறது. அனைத்து பயணிகளும் இ டிக்கெட் மூலம் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அத்துடன் ரயில்வே முன்பதிவு, ரயில் பயணம் உள்ளிட்டவை தொடர்பான அறிவுறுத்தல்களையும் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்துக்கு ரயில்கள் இல்லை

ஜூன் 1 முதல் இயக்கப்படும் ரயில்கள் பட்டியலில் தமிழகத்துக்கான ரயில்கள் எதுவும் இல்லை. கொரோனா பாதிப்பால் தமிழகத்துக்கு ரயில்கள் இயக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
The bookings for the tickets for 200 Non AC Trains will begin from Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X