டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல- ஓபிசி இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

Google Oneindia Tamil News

டெல்லி: இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல என்று தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு தமிழகம் வழங்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு - ஓபிசி மாணவர்களுக்கு 50 % இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கை. இதனை வலியுறுத்தி அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

Reservation Not a Fundamental Right, Says SC

தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக ரிட் மனுவைத் தாக்கல் செய்திருந்தது. இது தொடர்பான மனுக்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் ஒன்றாக விசாரித்தது.

இந்த விசாரணையின் போது இடஒதுக்கீடு உரிமை என்பது அடிப்படை உரிமை ஆகாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் தலைமையிலான பெஞ்ச் கருத்து தெரிவித்தது.

கொரோனா அச்சம்: 7 அட்டைப்பெட்டிகளில் வழக்குகளை தாக்கல் செய்யும் புதிய முறை திருச்சி கோர்ட்டில் அமல்! கொரோனா அச்சம்: 7 அட்டைப்பெட்டிகளில் வழக்குகளை தாக்கல் செய்யும் புதிய முறை திருச்சி கோர்ட்டில் அமல்!

இதனைத் தொடர்ந்து மனுதாரர்கள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

English summary
Supreme Court said that the Right to reservation is not a fundamental right on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X