டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வங்கியில் நகைக்கடனுக்கு அதிக பணம் உள்பட ரிசர்வ் வங்கி வெளியிட்ட மூன்று சூப்பர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: தங்க நகைகளின் மதிப்பில் இனி 90 சதவீதம் வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதேபோல் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்ற கடனை மறுசீரமைப்பு செய்ய வங்கிகள் அனுமதிக்க வேண்டும் என்றும் வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. எனினும் கடன் தவணை தள்ளிவைப்பு குறித்து இன்று ரிசர்வ் வங்கி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப வழியில்லாத நிலையே நீடிக்கிறது.

கொரோனாவால் இன்னமும் பல லட்சம் மக்ககள் வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளில்முடங்கி கிடக்கிறார்கள். மக்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொழில் செய்பவர்கள் தொழிலை நடத்த முடியாத அளவுக்கு முடங்கி போய் உள்ளனர். இதனால் பல லட்சம் பேர் வேலைஇழந்து தவிக்கிறார்கள்.

இந்திய ஜிடிபி எதிர்மறையாக இருக்கும்.. ரிசர்வ் வங்கி ஆளுநர் பேட்டி! வங்கி கடன் ஒத்திவைப்பு என்னாகும்?இந்திய ஜிடிபி எதிர்மறையாக இருக்கும்.. ரிசர்வ் வங்கி ஆளுநர் பேட்டி! வங்கி கடன் ஒத்திவைப்பு என்னாகும்?

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

பொருளாதாரம் மிகவும் மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு வருகிறது எனினும் அரசின் அறிவிப்புகள் இப்போது யானை பசிக்கு சோளப்பொறியாகவே உள்ளது. இந்நிலையில் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் பொருளாதார சீர்திருத்தின் முக்கிய படியாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வட்டிவிகிதம் எப்படி

வட்டிவிகிதம் எப்படி

கொரோனா காலத்தில், தற்போது வரை 1.15 சதவிதம் அளவிற்கு வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது. , பணவீக்கம் அதிகமாக இருப்பதால் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. குறுகிய கால கடன்களுக்கான ரெபோ வட்டி விகிதம் 4 சதவிதமாகவே தொடர்கிறது. 2020 21ம் நிதியாண்டின் 2ம் காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும்.

தங்க நகை கடன்

தங்க நகை கடன்

ஏழை மக்கள் பெறும் தங்க நகை கடனில், தங்க நகைகளின் மதிப்பில் இனி 90 சதவிதம் வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம். இது முன்னர் 75 சதவிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகை மார்ச் 31, 2021 வரை அமலில் இருக்கும் என்று ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கடன்

வீட்டுக்கடன்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்ற கடனை மறுசீரமைப்பு செய்ய வங்கிகள் அனுமதிக்க வேண்டும் என்று அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, பணவீக்கம் தொடர்ந்து உச்சத்தில் உள்ளதாகவும், கொரோனாவால் உணவு பொருட்களின் விலை சர்வதேச நாடுகளிலும் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது. வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10 ஆயிரம் கோடியுடன் கூடுதலாக 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வாய் திறக்கவில்லை

வாய் திறக்கவில்லை

இந்நிலையில் ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்ட கடன் தவணை தள்ளிவைப்பு தற்போது முடிய உள்ள நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுபற்றி எந்த அறிவிப்பும் இன்றைக்கு ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை.

English summary
Reserve Bank of India increases gold loan to value ratio to 90 percent interest rates. RBI said banks can restructure loans of borrowers who are facing cash crunch and are unable to repay them
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X