டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முடிவு ஏமாற்றமே.! இறுதி வரை போராடிய இந்திய அணியை பார்க்க முடிந்தது.. பிரதமர் மோடி ட்விட்

Google Oneindia Tamil News

Recommended Video

    World Cup 2019 : இறுதி வரை போராடிய இந்திய அணியை பார்க்க முடிந்தது.. பிரதமர் மோடி ட்விட்- வீடியோ

    டெல்லி: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில், நியூசிலாந்திடம் வீழ்ந்தது இந்திய அணி. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

    இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்திய அணி இறுதி வரை போராட்ட குணத்துடன் விளையாடியதாக குறிப்பிட்டுள்ளார்.

    Results are disappointing.! I could see the Indian team struggling till the end .. PM Modi

    நேற்று துவங்கிய உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டி மழை காரணமாக தடைப்பட்டது. அப்போது நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 எடுத்திருந்தது.

    பின்னர் இன்று தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 8 விக்கெட்டுகளை இழந்து, 239 ரன்கள் எடுத்தது. எளிதான இலக்கு தானே 240 ரன்கள், இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு முன்னேறும் என நம்பப்பட்டது.

    ஆனால் ஆட்டம் தலைகீழாக மாறி கடைசி வரை போராடி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது டீம் இந்தியா. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    இந்நிலையில் பிரதமர் மோடி டீம் இந்தியாவின் தோல்வி குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் இது ஏமாற்றமான முடிவு, எனினும் இந்திய அணி கடைசி வரை கடுமையாக போராடியதாக பாராட்டியுள்ளார்.

    இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதுமே இந்திய அணியினர் சிறப்பாக பேட்டிங் செய்தனர், மேலும் சிறப்பாக பந்து வீசினர். இதை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம் என ட்விட்டியுள்ளார்.

    மேலும் வெற்றிகளும், தோல்விகளும் வாழ்க்கையின் ஒரு பகுதி. எனவே டீம் இந்தியாவின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    English summary
    The 2019 World Cup Cricket semifinals in the UK fell to New Zealand. Indian cricket fans are very upset.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X