டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2017-2018 ஜிடிபியில் மாற்றம்.. பட்ஜெட்டிற்கு முதல்நாள் புதிய அறிக்கையை வெளியிட்ட மத்திய அரசு!

2017-2018ன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.2 சதவிகிதமாக உயர்ந்து இருப்பதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: 2017-2018ன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.2 சதவிகிதமாக உயர்ந்து இருப்பதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

மத்திய அரசின், மத்திய புள்ளியியல் அலுவலகம் (The Central Statistics Office) கடந்த வருடம் இந்திய ஜிடிபி குறித்த அறிக்கையை தாக்கல் செய்தது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-2018 நிதி ஆண்டில் எவ்வளவு சதவிகிதம் இருந்தது என்று அறிக்கையாக தாக்கல் செய்து இருந்தது.

அதன்படி இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மொத்தம் 6.7 சதவிகிதமாக இருக்கும் என்று கூறியது. இதற்கான விவரங்களும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான காரணங்களும் இதில் விவரிக்கப்பட்டு இருந்தது.

திருத்த அறிக்கை

திருத்த அறிக்கை

இந்த நிலையில் தற்போது இந்த சதவிகிதம் மாற்றப்பட்டு இருக்கிறது. அதன்படி தற்போது 2017-2018ன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 % என்று கூறப்பட்டு உள்ளது. கடந்த வருட ஜிடிபி 7.2 ஆக உயர்ந்து முடிந்ததாக மத்திய அரசு கூறி இருக்கிறது. அறிக்கையில் திருத்தம் செய்து தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

நாளை பட்ஜெட்

நாளை பட்ஜெட்

நாளை மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது. இந்த நிலையில் இந்த திருத்தப்பட்ட ஜிடிபி அறிக்கை வெளியாகி இருக்கிறது. கடைசி நேரத்தில் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்ததன் காரணத்தால் ஜிடிபியின் சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் உயரும்

மேலும் உயரும்

அதேபோல் இந்த வருடத்திற்கான ஜிடிபி குறித்தும் இதில் கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வருடம் இந்தியாவின் ஜிடிபி வேகமாக உயரும் என்று கூறப்பட்டு உள்ளது. அதன்படி 8.2 சதவிகிதமாக இந்த வருடம் ஜிடிபி உயர வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

என்ன காரணம்

என்ன காரணம்

மேலும் 2016-2017 ஜிடிபி 8.2 ஆக இருந்தது என்றும் மத்திய அரசின் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டு இருக்கிறது.விவசாயம், தொழிற்துறை, வர்த்தகம் ஆகிய துறைகளில் அதிக உற்பத்தி கடந்த ஆண்டுகளில் நிகழ்ந்து இருக்கிறது. இதனால்தான் ஜிடிபி அதிகம் அடைந்தது என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

English summary
Revised GDP one day before Budget: Govt releases new GDP Growth Rate for 2017-18 as 7.2%. Earlier it was 6.7% only.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X