டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பெங்காலி பிராமணர்" ரியாவை கைது செய்திருப்பது வேடிக்கையா இருக்கு.. அதிர் ரஞ்சன் அதிரடி பேச்சு!

Google Oneindia Tamil News

டெல்லி: ''போதை மருந்து குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கும் ரியா சக்ரபர்த்தி மேற்குவங்க பிராமணர் பெண். அவரது தந்தை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. அவரை கைது செய்து இருப்பது நகைப்புக்குரியது. தனது மகளுக்கு நீதி கோருவதற்கு ரியாவின் தந்தைக்கு முழு உரிமை உள்ளது'' என்று மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக இருப்பவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி. இவர் தற்போது மேற்குவங்க மாநிலத்தின் பாஜக தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவர் தனது ட்விட்டரில் ரியா கைது குறித்து பதிவு செய்துள்ளார். அதில், ''நடிகர் சுஷாந்த் ராஜ்புட் மரணத்தை பீகார் தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கு பார்க்கின்றனர்.

Rhea Chakrabortys arrest over drug charges as ludicrous says Adhir Ranjan Chowdhury

அவர் ஒரு இந்திய நடிகராக இருக்கிறார். ஆனால், அவரை பீகார் நடிகராக சித்தரிக்கப் பார்க்கிறது பாஜக. தேர்தலில் ஆதாயம் தேடுவதற்காக பாஜக இதுபோல் நடந்து கொள்கிறது. ரியாவின் தந்தை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. நாட்டுக்காக அவர் உழைத்து இருக்கிறார். தனது மகளுக்கு நீதி கோருவதற்கு ரியாவின் தந்தைக்கு முழு உரிமை உள்ளது. அவர் பெங்காலி பிராமணர். சுஷாந்துக்கு நீதி கிடைப்பதை பீகார் மக்களுக்கு நீதி கிடைப்பதாக மாற்றக் கூடாது.

டெல்லியில் இருக்கும் தங்களது எஜமானர்களை ஏமாற்றுவதற்காக கடலை கடைந்த பின்னர் அமிர்தம் எடுப்பதற்கு பதிலாக போதை மருந்தை கண்டுபிடித்துள்ளது சிபிஐ. இன்னும் இருட்டில் கொலையாளியை தேடிக் கொண்டுள்ளனர்'' என்று பதிவிட்டுள்ளார்.

பீகாரில் வேண்டுமானாலும், சுஷாந்த் மரணம் தேர்தலுக்கு பயன்படலாம். ஆனால், ரியா பெங்காலி என்பதால் இதுவரை அங்கு எந்தவித எதிரொலியும் எழும்பவில்லை. முதன் முறையாக சவுத்ரிதான் ரியா குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதுவும் மேற்குவங்க மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் கேள்வி எழுப்பியுள்ளார். அனைவருக்கும் சமமான நீதி கிடைக்க வேண்டும் என்று சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

Rhea Chakrabortys arrest over drug charges as ludicrous says Adhir Ranjan Chowdhury

மேலும், ரியா எந்தவித பொருளாதார குற்ற நடவடிக்கைகள் அல்லது கொலை, தற்கொலை தொடர்பாக கைது செய்யப்படவில்லை. என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

அரியலூர் விக்னேஷ் குடும்பத்துக்கு...ரூ. 7 லட்சம் இழப்பீடு... ஒருவருக்கு அரசு பணி!! அரியலூர் விக்னேஷ் குடும்பத்துக்கு...ரூ. 7 லட்சம் இழப்பீடு... ஒருவருக்கு அரசு பணி!!

தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு போதை மருந்து கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் நடிகை ரியா கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வயது 28. சுஷாந்த் மரணம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. கடந்த ஜூன் 14ஆம் தேதி சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியாகி இருந்தது. ரியா சகோதரர் சோவிக் மற்றும் சுஷாந்த் சிங் பணியாளர்கள் உள்பட இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

English summary
Rhea Chakraborty's arrest over drug charges as "ludicrous says Adhir Ranjan Chowdhury
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X