India
  • search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆட்டம் காட்டும் கொரோனா! குறுக்கே வந்த குரங்கு அம்மை! இத்தனை பேருக்கு பாதிப்பா? அச்சத்தில் மக்கள்!

Google Oneindia Tamil News

டெல்லி : உலகளவில் கொரோனா நோய்த்தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில் பெல்ஜியம் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பால் பாதிக்கப்பட்டிருப்பது சுகாதார நிபுணர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனாவுக்குப் பிறகு உலக மக்களை மீண்டும் ஒரு அச்சுறுத்தலில் ஆழ்த்தும் விதமாக மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு காய்ச்சல் தற்போது மேற்கத்திய நாடுகளில் மிக தீவிரமாக பரவி வருகிறது.

தற்போது ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் போன்றவற்றில் இதன் பாதிப்பு திடீரென அதிகரித்து வரும் நிலையில், கொரோனா போல மீண்டும் ஒரு பேரழிவை சந்திக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது.

ட்விஸ்ட் வைக்கும் கொரோனா! நேற்றை விட அதிகரித்த தினசரி பாதிப்பு! ஒரே நாளில் இத்தனை பேர் பலியா? ட்விஸ்ட் வைக்கும் கொரோனா! நேற்றை விட அதிகரித்த தினசரி பாதிப்பு! ஒரே நாளில் இத்தனை பேர் பலியா?

குரங்கு அம்மை பாதிப்பு

குரங்கு அம்மை பாதிப்பு

குரங்கு அம்மையானது எலி, அணில் போன்ற கொறித்துண்ணி விலங்குகளின் கடியாலோ, விலங்கின் கீறலாலோ, காட்டில் வேட்டையாடிய விலங்கின் இறைச்சியை உண்பது, குரங்கு அம்மை பாதிப்பு உள்ளவரோடு நெருங்கிய தொடர்பு, கொப்புளங்களில் இருந்து வரும் நீர் கலப்பு ஆகியவற்றால் பரவுகிறது. முதல் முதலில் குரங்குகளில் இந்த நோய் கண்டறியப்பட்டதால் குரங்கு அம்மை எனவும், மங்கி பாக்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது.

நோய் அறிகுறிகள்

நோய் அறிகுறிகள்

விலங்குகள் மற்றும் மனிதர்கள் என பாலூட்டிகளை தாக்கும் குரங்கு அம்மை, பெரியம்மை வகை குடும்பத்தைச் சேர்ந்த குரங்கம்மை வைரசால் உண்டாகும் ஒரு தொற்றுநோய் ஆகும். காய்ச்சல், தலைவலி, உடலில் தசை வலி, நெறிகட்டுதல், களைப்பாக உணர்தல் ஆகிய அறிகுறிகள் முதலில் ஏற்படும். இதனைத்தொடர்ந்து கொப்புளம், தடிப்புகள் போன்றவை தோன்றலாம். உடனடியாகக் கவனம் செலுத்தாவிட்டால் மரணம் வரை கொண்டு செல்லும் வாய்ப்பு உள்ளது.

மருத்துவர்கள் எச்சரிக்கை

மருத்துவர்கள் எச்சரிக்கை

தற்போது குரங்கு அம்மை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகள், கனடா , அமெரிக்கா, பெல்ஜியம் ,பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஸ்பெயின், ஸ்வீடன், இத்தாலி, போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளில் 1500க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆப்பிரிக்காவிலும் இந்த பாதிப்பானது உறுதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் இந்த பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் கோடை காலங்களில் அதிக அளவு கூட்டம் கூடுவது புதிய நபர்களுடன் பாலியலுறவு ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

 அச்சத்தில் இங்கிலாந்து

அச்சத்தில் இங்கிலாந்து

இந்நிலையில் இங்கிலாந்தில் மட்டும் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். இங்கிலாந்து மட்டுமல்லாது , ஸ்காட்லாந்து பகுதியில் இருபத்தி ஏழு பேரும், வடக்கு அயர்லாந்தில் ஐந்து பேரும், வேல்ஸில் ஒன்பது பெயர் மற்றும் ஆங்கிலத்தில் ஆயிரத்து 35 பேர் குரங்கு அம்மை பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் இந்த பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் இங்கிலாந்து வரலாற்றில் இது ஒரு சோக நிகழ்வு என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

English summary
Health experts are alarmed by the fact that more than 2,000 people in countries including Belgium and the United Kingdom have been affected by monkey pox as the corona epidemic spreads rapidly worldwide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X