டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வீழ்வேன் என நினைத்தாயோ? 3 ஆண்டுகளுக்குப் பின் ஆக்டிவ் அரசியலில் லாலு-பீகாரில் இனிதான் ஆட்டம்!

Google Oneindia Tamil News

டெல்லி: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற நிலையில் ஜாமீனில் வெளிவந்திருக்கும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) நிறுவனரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின் தீவிர அரசியலுக்குத் திரும்பியுள்ளார்.

சென்னையில் அவசிய பணிகளுக்காக இன்று முதல் 200 மாநகரப் பேருந்துகள் இயக்கம் சென்னையில் அவசிய பணிகளுக்காக இன்று முதல் 200 மாநகரப் பேருந்துகள் இயக்கம்

பீகார் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாத மீது மாட்டுத் தீவனம் கொள்முதல் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் ஒன்றில் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் லாலு பிரசாத் யாதவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஜாமீனில் லாலு

ஜாமீனில் லாலு

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு பிரசாத் யாதவுக்கு அண்மையில் ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து டெல்லியில் மூத்த மகள் வீட்டில் தங்கி உள்ளார் லாலு பிரசாத் யாதவ். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு உடலில் ஆக்சிஜன் அளவு இயல்பைவிட குறைவாக இருக்கிறது.

தலைவர்களுடன் ஆலோசனை

தலைவர்களுடன் ஆலோசனை

இந்த நிலையிலும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர்களுடன் ஞாயிற்றுக்கிழமையன்று ஆலோசனை நடத்தி இருக்கிறார் லாலு பிரசாத் யாதவ். அப்போது, கொரோனாவால் மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற முடியாமல் இருக்கும் மக்களை காப்பாற்றுவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என உருக்கமாக லாலு வேண்டுகோள் விடுத்தார்.

பீகார் அரசியல்

பீகார் அரசியல்

லாலு பிரசாத் யாதவால் நீண்ட நேரம் பேச முடியவில்லை. இருந்தபோதும் அவர் உருக்கமாக மக்களைப் பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது ஆர்ஜேடி தலைவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆர்ஜேடி தலைவர்கள், லாலு பிரசாத் மெல்ல மெல்ல அரசியல் பணிகளுக்கு முழுமையாக திரும்புவார். பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வீழ்த்த வியூகம் வகுத்து களமிறங்குவார் லாலு என்கின்றனர் அக்கட்சியின் சீனியர்க.

ஆர்ஜேடி பெருமிதம்

ஆர்ஜேடி பெருமிதம்

மேலும் பீகாரில் இதுவரை எந்த ஒரு தலைவருமே பொதுமக்களை பற்றி கவலைப்பட்டது இல்லை. தமக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் சூழலிலும் கூட மக்களுக்காக கவலைப்படுகிற ஒரே தலைவர் லாலுதான் என்றும் பெருமிதப்படுகின்றனர் ஆர்ஜேடி தலைவர்கள்.

English summary
RJD Chief Lalu Prasad Yadav Hold Virtual Meeting With Party leaders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X