டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சொத்து குவிப்பு வழக்கு.. அமலாக்கத்துறை முன் ஆஜரான ராபர்ட் வத்ரா.. உடன் வந்த பிரியங்கா!

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா பண மோசடி வழக்கிலும், சொத்து குவிப்பு வழக்கிலும் இன்று அமலாக்கத்துறை முன் விசாரணைக்காக ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

Google Oneindia Tamil News

டெல்லி: பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா பண மோசடி வழக்கிலும், சொத்து குவிப்பு வழக்கிலும் இன்று அமலாக்கத்துறை முன் விசாரணைக்காக ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா மீது நிறைய வழக்குகள், பண மோசடி புகார்கள் இருக்கிறது. ஹரியானா ராஜஸ்தானின் நிலம் வாங்கிய விவகாரத்தில் அமலாக்க வாரியம் வத்ரா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

Robert Vadra all set to appear before ED today on money laundry case

இது தொடர்பாக பாஜக நிறைய வீடியோக்களை இதுவரை வெளியிட்டு இருக்கிறது. அதேபோல் ராபர்ட் வத்ரா லண்டனில் மோசடி செய்து சொத்துக்களை குவித்து இருக்கிறார் என்றும் புகார் வைக்கப்பட்டுள்ளது. லண்டனில் 20 கோடி ரூபாய்க்கு முறைகேடாக நிலம் வாங்கியது, இரண்டு புதிய வீடுகள் வாங்கியது மற்றும் புதிதாக நிறைய சொத்துக்களை வாங்கியது குறித்து அமலாக்கத்துறை வத்ரா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறது. இது தொடர்பான வழக்கு டெல்லி ஹைகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது வத்ரா இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறார்.

கடந்த வாரம் டெல்லி ஹைகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ராபர்ட் வத்ராவிற்கு இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டது. அதன்படி 1 லட்சம் ரூபாய் பிணை தொகை மற்றும் அமலாக்கத்துறை விசாரணையில் சரியாக ஆஜராக வேண்டும் ஆகிய நிபந்தனையுடன் இவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை கடந்த விசாரணையின் போதே, ராபர்ட் வத்ரா 6ம் தேதியான இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இன்று நடக்கும் அமலாக்கத்துறை விசாரணையில் ராபர்ட் வத்ரா ஆஜரானார்.

இவருடன் பிரியங்கா காந்தியும் காரில் வந்தார். ஆனால் அவர் காரைவிட்டு இறங்கவில்லை. பிரியங்கா காந்தி காரில் இருக்க, ராபர்ட் வத்ரா மட்டும் வாக்குமூலம் அளித்துவிட்டு வந்தார்.

பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியில் தற்போது தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட தொடங்கி உள்ளார். இந்த நிலையில் ராபர்ட் வத்ராவின் மீதான புகார் தேர்தல் நேரத்தில் காங்கிரசுக்கு எதிராக பாஜகவின் பிரச்சாரத்தில் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Robert Vadra all set to appear before Enforcement Directorate today on money laundry case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X