டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதிய கல்வி கொள்கைக்கு மக்கள் ஆதரவு.. பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: புதிய கல்வி கொள்கைக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளதாக டெல்லியில் நடைபெற்ற ஆளுநர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாடு முழுவதும் தற்போது தேசிய புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. புதிய கல்வி கொள்கைக்கு ஒரு பக்கம் எதிர்ப்பும், இன்னொரு பக்கம் ஆதரவும் எழுந்து வருகிறது.

முக்கியமாக புதிய கல்விக் கொள்கையின் மும்மொழி கொள்கை அறிவிப்பு அதிக விமர்சனங்களை சந்தித்துள்ளது.இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆளுநர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

தேசிய கல்விக் கொள்கை 2020-இன் பங்கு (Role of NEP-2020 in Transforming Higher Education) என்ற தலைப்பில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Newest First Oldest First
11:18 AM, 7 Sep

புதிய கல்வி கொள்கையானது இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் இருக்க வேண்டும்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். புதிய கல்வி கொள்கையானது 21-ம் நூற்றாண்டின் தேவைகளை நிறைவேற்றக் கூடியதாக இருக்க வேண்டும்
11:12 AM, 7 Sep

பிரதமர் மோடி உரையை தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்
11:12 AM, 7 Sep

பழங்காலத்தில் இருந்தே கற்றலின் மையமாக இந்தியா திகழ்கிறது- 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டுவருகிறோம்
11:04 AM, 7 Sep

மாணவர்கள் வித்தியாசமாக சிந்திப்பதை புதிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது - பிரதமர் மோடி. புத்தகத்தை தாண்டிய கல்வியை இந்த கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது - பிரதமர் மோடி
11:04 AM, 7 Sep

தேசத்தின் இலக்குகளை நிறைவேற்றுவதில் கல்வி கொள்கையும் கல்வி முறையும் முக்கியமான பங்களிப்பு வகிக்கின்றன
11:00 AM, 7 Sep

மாணவர்கள் விரும்புகிற கல்வியை கற்கு வகையில் அமைந்திருக்கிறது புதிய கல்வி கொள்கை
11:00 AM, 7 Sep

நாட்டின் கல்வி கொள்கை தொடர்பான விவாதங்கள் ஆரோக்கியமானவை- மோடி
11:00 AM, 7 Sep

புதிய கல்வி கொள்கையானது மத்திய அரசின் தற்சார்பு இலக்கை ஊக்கப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
11:00 AM, 7 Sep

நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய கல்விக் கொள்கை, கல்வி முறை முக்கியமானது. உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கல்வி முறையில் பங்கு இருக்கிறது- பிரதமர் மோடி
11:00 AM, 7 Sep

புதிய கல்வி கொள்கையில் மாநில அரசுகளின் பங்களிப்பு முக்கியமானது. புதிய கல்வி கொள்கை தொடர்பாக கல்வியாளர்கள் தங்களது கருத்தை தெரிவித்தனர்
10:53 AM, 7 Sep

புதிய கல்வி கொள்கை தொடர்பாக 5 ஆண்டுகளுக்கு முன்னரே பணி தொடங்கிவிட்டோம். புதிய கல்வி கொள்கை தொடர்பாக நகரம், கிராமங்களில் பல கோடி மக்களிடம் கருத்து பெற்றோம். புதிய கல்வி கொள்கை தொடர்பாக சுமார் 2 லட்சம் பேர் தங்களது ஆலோசனைகளை அனுப்பி உள்ளனர்.
10:45 AM, 7 Sep

புதிய கல்வி கொள்கை மாநாட்டில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்பு
10:40 AM, 7 Sep

பிரதமர் மோடி உரையாற்ற தொடங்கினார்
10:31 AM, 7 Sep

உயர்கல்வியை மாற்றியமைப்பதில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன் பங்கு- Role of NEP-2020 in Transforming Higher Education என்ற தலைப்பில் ஆலோசனை
10:30 AM, 7 Sep

புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆளுநர்களிடம் ஆலோசனை கேட்க திமுக கடும் எதிர்ப்பு
10:29 AM, 7 Sep

புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆளுநர்களுடனான ஆலோசனை கருத்தரங்கம். இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். தேசிய கல்விக் கொள்கை 2020-இன் பங்கு கருத்தரங்கில் மோடி உரை. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பல்வேறு அமைச்சர்கள் இதில் பேச இருக்கிறார்கள்.

Role of NEP-2020 in Transforming Higher Education: PM Modi speech live updates
English summary
Role of NEP-2020 in Transforming Higher Education: PM Modi to speak in the meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X