டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஔரங்கபாத் விபத்து: பசி- தாகத்தாலேயே செத்து விடுவோம்.. மனைவியிடம் கடைசியாக பேசிய கணவன்

Google Oneindia Tamil News

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்கபாத் அருகே ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கி கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறி 16 பேர் பலியான சம்பவத்தில் பசியால் செத்துவிடுவோம் என தங்களது குடும்பத்தினரிடம் கடைசியாக பேசியுள்ளனர்.

Recommended Video

    Airangabad Train incident| மனைவியிடம் கடைசியாக பேசிய கணவன்

    மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னாவில் உள்ள ஸ்டீல் தொழிற்சாலையில் மத்திய பிரதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக பணியில்லாததாலும் ஊதியம் இல்லாததாலும் இவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

    இதனால் ஜால்னாவிலிருந்து புவாசல் பகுதிக்கு ரயில் ஏறுவதற்காக இவர்கள் சென்றனர். அப்போது போலீஸ் கெடுபிடிக்கு பயந்து கொண்டு ரயில் தண்டவாளம் வழியாக சென்றனர்.

    வைரசோடு வாழப் பழகுங்கள்.. மத்திய அரசு திடீரென இப்படி கூற என்ன காரணம்? மே 17க்கு பிறகு என்ன நடக்கும்?வைரசோடு வாழப் பழகுங்கள்.. மத்திய அரசு திடீரென இப்படி கூற என்ன காரணம்? மே 17க்கு பிறகு என்ன நடக்கும்?

    தண்டவாளம்

    தண்டவாளம்

    புவாசல் சென்றால் அங்கிருந்து மத்திய பிரதேசத்திற்கு ரயிலில் செல்லலாம் என புறப்பட்டுள்ளனர். பல கி.மீ தூரம் நடந்து சென்ற இவர்கள் களைத்து போனர். இதனால் சரக்கு ரயிலை மறந்த இவர்கள் பயணிகள் ரயில்கள் வராது என நினைத்து ரயில் தண்டவாளங்களில் தலை வைத்து படுத்து தூங்கினர். இந்த நிலையில் சரக்கு ரயில் ஒன்று அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்ததால் இவர்கள் மீது ஏறியது.

    பணம் இல்லை

    பணம் இல்லை

    இதில் 16 பேர் உடல் சிதறி இறந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பாஸ் கோரிய நிலையில் அதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பலியான 16 பேரில் ஒருவரது குடும்பத்தினர் கூறுகையில் எங்களிடம் பணம் இல்லை.

     ஒப்பந்ததாரர்

    ஒப்பந்ததாரர்

    பணம் ஏதாவது இருந்தால் அனுப்புங்கள். ஒப்பந்ததாரரும் பணம் தரவில்லை. உணவில்லாமல் பசி வாட்டி வதைக்கிறது. குடிக்க தண்ணீர் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பசி தாகத்தாலேயே செத்து விடுவோம் போல் இருக்கிறது என தனது மனைவியிடம் கடந்த வியாழக்கிழமை அவர் தெரிவித்துள்ளார். கடந்த இரு மாதங்களாக இவர்களுக்கு ஊதியம் வழங்காமல் ஒப்பந்ததாரர் இழுத்தடித்து வந்துள்ளார்.

    தொழிலாளர்

    தொழிலாளர்

    ஒரு கட்டத்தில் அனைவரும் கேட்ட போது இதோ தருகிறேன் அதோ தருகிறேன் என பொய் கூறியிருந்தார். கடந்த 7-ஆம் தேதி ஊதியம் தருவதாக கூறியிருந்த இவர் மாயமாகிவிட்டார். இவர் மட்டும் சம்பளம் கொடுத்திருந்தால் தொழிலாளர்கள் ஊர்களுக்கு செல்ல முயன்றிருக்க மாட்டார்கள். தண்டவாளங்களில் படுத்துறங்குவது எத்தனை ஆபத்தானது என்பதை யோசிக்கக் கூட தங்களுக்கு தெம்பில்லை என விபத்தில் சிக்காத ஒரு தொழிலாளர் தெரிவித்தார்.

    English summary
    Rotis and Chutneys scattered on the railway track as it was broght by Aurangabad train accident victims.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X