டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மார்ச் 31ம் தேதி கெடு.. பான் கார்டுடன் ஆதார் நம்பரை இணைக்காவிட்டால்.. ரூ.10 ஆயிரம் போச்சு

Google Oneindia Tamil News

மும்பை: உங்கள் பான் கார்டு எண்ணை, ஆதார் எண்ணுடன் இந்த மாதம் 31-ஆம் தேதிக்குள் இணைக்காவிட்டால், பெரும் சிக்கலில் சிக்கி கொள்ள நேரிடும் என்கிறது வருமான வரித்துறை வட்டாரங்கள்.

Recommended Video

    PAN card holders could be fined Rs 10,000 penalty for cancelled card

    நமது நாட்டில் பல்வேறு கார்டுகள் அறிமுகம் செய்யப்படுவதும், அவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட வேண்டும் என்று ரூல்ஸ் போடுவதும் ஒன்றும் புதிது கிடையாது. அப்படித்தான், பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

    இதற்கான டெட்லைன் மார்ச் 31ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அப்படி இணைக்காவிட்டால், என்ன என்பது தானே உங்கள் கேள்வி.

    500 கோடியில் திருமணம்.. 9 நாட்களுக்கு அசத்தல் மெனு.. கலக்கும் கர்நாடக அமைச்சர்.. மோடிக்கும் அழைப்பு500 கோடியில் திருமணம்.. 9 நாட்களுக்கு அசத்தல் மெனு.. கலக்கும் கர்நாடக அமைச்சர்.. மோடிக்கும் அழைப்பு

    வருமான வரித்துறை சட்டம்

    வருமான வரித்துறை சட்டம்

    இரட்டை சிக்கலில் சிக்கிக்கொள்ள நேரிடும். ஏனெனில் ஒருவேளை உங்கள் பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், அந்த பான் கார்டு செயலிழப்பு செய்யப்படும் என்பது ஒரு சிக்கல், என்றால், இவ்வாறு செய்யாதது குற்றச் செயலாக கருதப்பட்டு உங்களுக்கு 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். வருமான வரித்துறை சட்டம் 272b பிரிவின் கீழ் இப்படியான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்கிறது வருமானவரித்துறை.

    10 ஆயிரம்

    10 ஆயிரம்

    மார்ச் 31-ஆம் தேதிக்குள் நீங்கள் இப்படி இரு கார்டுகளையும் இணைக்காவிட்டால் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் பான் கார்டு செயல்படாது. எனவே வங்கி பண பரிவர்த்தனை மற்றும் பல்வேறு நிதி சார்ந்த விவகாரங்களில் உங்களால் எதுவும் செய்ய முடியாமல் போய்விடும். மற்றொரு பக்கம் உங்கள் பாக்கெட்டில் இருந்து 10 ஆயிரம் ரூபாயும் எடுக்கப்படும்.

    நிதிசாராத பணிகள்

    நிதிசாராத பணிகள்

    இதுபற்றி வருமானவரித் துறை வட்டாரங்கள் கூறுகையில், ஒருவேளை ஆதார் எண்ணுடன் உங்கள் பான் எண்ணை இணைக்காவிட்டால் கூட அதை ஒரு அடையாள அட்டை என்ற அடிப்படையில் வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது வரி சாராத விஷயங்களுக்கு பயன்படுத்தலாம். வங்கி கணக்கு துவங்குவது, டிரைவிங் லைசென்ஸ் எடுக்க அடையாள அட்டையாக கொடுப்பது என்பது போன்ற பணிகளுக்கு இதை பயன்படுத்தலாம். ஆனால் 50,000 ரூபாய்க்கு மேற்பட்ட பண பரிவர்த்தனை செய்யும் போது, பான் நம்பர் கட்டாயம். அதுபோன்ற சூழ்நிலைகளில் அபராதம் விதிக்கப்படும் என்கிறார்கள்.

    நல்ல சேதி

    நல்ல சேதி

    இதில் ஒரே ஒரு நல்ல செய்தி இருக்கிறது. ஒரு வேளை நீங்கள் மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் எண் ஆகியவற்றை இணைக்காவிட்டால், பான் கார்டு செயலிழந்து போய்விடும் என்பது உண்மைதான். இருப்பினும் பின்னர் நீங்கள் ஆதார் எண்ணை இணைத்துவிட்டால் பான் கார்டு செயல்பட தொடங்கிவிடும் என்பதுதான் அந்த நல்ல செய்தி.

    இணைப்பு

    இணைப்பு

    வருமான வரித்துறை வெப்சைட் சென்று அல்லது எஸ்எம்எஸ் என இரு முறைகளில் ஒன்றை பயன்படுத்தி பான் எண்ணுடன், ஆதாரை இணைக்க முடியும்.
    வருமான வரித்துறை வலைத்தளம் மூலம் ஆதாருடன் பான் இணைத்தல்:

    • ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பான், ஆதார் எண் மற்றும் பெயரை வழங்கவும்
    • ஆதார் அட்டையில் பிறந்த ஆண்டு மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தால், ஸ்கொயர் பகுதியை கிளிக் செய்க
    • கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும். (பார்வை குறைபாடு உள்ள பயனர்கள் கேப்ட்சா குறியீட்டிற்கு பதிலாக OTPஐக் கோரலாம். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்)
    • 'Link Aadhaar என்பதை கிளிக் செய்க. அவ்வளவுதான்
    எஸ்எம்எஸ்

    எஸ்எம்எஸ்

    பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 க்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் பான் நம்பருடன், ஆதார் எண்ணை இணைக்கலாம். அவ்வாறு செய்ய, நீங்கள் UIDPAN <12-இலக்க ஆதார்> <10-இலக்க பான்> என டைப் செய்து அனுப்ப வேண்டும்.

    English summary
    Fine of RS 10,000 for individuals who fail to link their PAN cards with Aadhaar by the end of March 31, 2020.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X