டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ. 2000 நோட்டு அச்சிடுவது குறைப்பு... தடையா... மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!!

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் ரூ. 2000 நோட்டு அச்சிடுவது குறைக்கப்பட்டுள்ளது ஆனால், தடை செய்யப்படவில்லை. அதுகுறித்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை என்று லோக் சபாவில் எழுத்துபூர்வ பதிலில் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ரூ. 2000 நோட்டு அச்சிடுவது நிறுத்தப்பட்டு இருப்பதாக அவ்வப்போது செய்தி வெளியாகி வருகிறது. இதுகுறித்து லோக் சபாவில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு மத்திய நிதியமைச்சகத்தின் இணை அமைச்சர் அனுராக் தாகூர் எழுத்துபூர்வ பதில் அளித்து இருந்தார்.

அவங்க வருவாங்கன்னு நினைக்கலை.. ஸ்டன் ஆன ரசிகர்கள்.. டெல்லி vs பஞ்சாப் போட்டியில் செம டிவிஸ்ட்! அவங்க வருவாங்கன்னு நினைக்கலை.. ஸ்டன் ஆன ரசிகர்கள்.. டெல்லி vs பஞ்சாப் போட்டியில் செம டிவிஸ்ட்!

தடையா

தடையா

அதில், ''நாட்டில் 2000 ரூபாய் நோட்டு அச்சிடுவது நிறுத்தப்படவில்லை. குறைக்கப்பட்டுள்ளது. மக்களின் பயன்பாட்டுக்கு உதவும் வகையில் சில ரூபாய் நோட்டுக்கள் இந்திய ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே அச்சிடப்படும்.

உத்தரவு

உத்தரவு

கடந்த 2019-20 மற்றும் 2020-21 கால கட்டத்தில், 2000 ரூபாய் நோட்டு அச்சிடுவது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால், இந்த ரூபாய் நோட்டு அச்சிடுவது தடை செய்வது குறித்து எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. 2020, மார்ச் 31ஆம் தேதி வரை நாட்டில் 2,000 ரூபாய் நோட்டு, மொத்தம் ரூ. 273.98 கோடி புழக்கத்தில் இருந்தது.

ரூபாய் நோட்டு

ரூபாய் நோட்டு

கொரோனா கால கட்டத்தில் தற்காலிகமாக ரூபாய் நோட்டு அச்சிடுவது நிறுத்தப்பட்டு இருந்தது. மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் நெறிகளின்படி சிறிது சிறிதாக ரூபாய் நோட்டு அச்சிடும் பணி துவங்கும்.

மீண்டும் துவக்கம்

மீண்டும் துவக்கம்

கொரோனா தாக்கத்தின் காரணமாக 2020, ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல், மே 3ஆம் தேதி வரை பாரதிய ரிசர்வ் வங்கி முத்ரன் பிரைவேட் லிமிடெட் நோட்டு அச்சிடுவதை ரத்து செய்து இருந்தது. மே 4ஆம் தேதி முதல் மீண்டும் அச்சிடுவது துவங்கியுள்ளது. இந்திய பிரிண்டிங் அண்ட் மின்டிங் கார்பரேஷனிலும் நோட்டு அச்சிடுவது நிறுத்தப்பட்டு இருந்தது'' என்று தெரிவித்துள்ளார்.

English summary
Rs 2,000 denomination notes prints lowered but not discontinue says Anurag Thakur
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X