டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பட்ஜெட் 2020:1 லட்சம் கிராமப் பஞ்சாயத்துக்களை இணைக்க பாரத் நெட் திட்டத்துக்கு ரூ.6,000 கோடி நிதி

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் 1 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளை பாரத் நெட் திட்டம் மூலம் இணைப்பதற்கு ரூ6,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

Rs. 6000 crore proposed for Bharatnet Programme

பாரத்நெட் மூலம் நடப்பாண்டில் ஆண்டில் ஒரு லட்சம் கிராமப் பஞ்சாயத்துகள் பைபர் ஆப்டிக்கல் வாயிலாக இணைக்கப்படும். அங்கன்வாடி, சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள், அரசுப் பள்ளிகள் போன்ற அனைத்து பொது அமைப்புகளுக்கும் டிஜிட்டல் இணைப்பை வழங்கும் நோக்கம் இதன் மூலம் நிறைவேற்றப்படும்.

பாரத் நெட் திட்டத்தின் இந்த நோக்கத்திற்காக 2020-21 ஆம் ஆண்டில் ரூ.6,000 கோடி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தேசிய குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகள் திட்டத்திற்கு ரூ.8,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் 2020: உடான் திட்டத்தின் கீழ் 2024-க்குள் மேலும் 100 புதிய விமான நிலையங்கள்பட்ஜெட் 2020: உடான் திட்டத்தின் கீழ் 2024-க்குள் மேலும் 100 புதிய விமான நிலையங்கள்

நாடு முழுவதும் புள்ளி விவர கட்டமைப்பு பூங்காக்கள் அமைக்கப்படும். அறிவுசார் பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப குழுமங்கள் மூலம் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

English summary
Union Finance Minsiter Nirmala Sitharaman said that to link 1,00,000 gram panchayats with Fibre to the Home connections through Bharatnet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X